பக்கம்:முத்துச் சிப்பி.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 69

கது. அதற்காகத் தன் நண்பரை டாக்டர் காமாட்சி அழைத்திருந்தாள்.

13. ராதாவுக்குத் தெரிந்தவர்

அன்றிரவு டாக்டர் பூரீதரன் வீட்டுக்கு வரும் போது இரவு ஒரு மணி ஆகிவிட்டது. அவரால் முடிந்த வரையில் சுப்புலட்சுமிக்கு வைத்தியம்செய்து பார்த்தார். தான் பிழைத்து எழ வேண்டும் என்கிற ஆசை அவள் மனத்தை விட்டுப் போய் பலகாலம் ஆயிற்று. ஊசிகளுக் கும் மருந்துகளுக்கும் அந்த மனத்தின் அபிப்பிராயத்தை எதிர்த்து நிற்கும் சக்தி இல்லை. ' குழந்தை, குழந்தை!' என்று வீட்டைச் சுற்றி வளைய வந்த ஒரு ஜீவன் மறைந்து போவதில் டாக்டர் காமாட்சிக்குத் தான் வருத்தம். தன் அம்மா இனிமேல் பிழைக்க மாட்டாள் என்பது தெரிந்திருந்தும் அவளைப் பிழைக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள். அந்த அறியா மையை நினைத்து அவள் மனத்துள் சிரித்துக் கொண்டாள்.

இரவு மூன்று மணிக்கு டாக்டர்காமாட்சி பூரீதரனுடன் போனில் பேசினாள். விளக்கு அணையும் தறுவாயில் இருக்கிறது. அம்மா ரொம்பவும் சிரமப் படுகிறாள். ஊசி களையும், மருந்துகளையும் நிறுத்தி விட்டேன். அவள் இது வரையில் ஆராதித்து வந்த கற்பகாம்பிகை ஸ்தோத் திரங்களை மாத்திரம் சொல்லி வருகிறேன்...... H. P. 'போனில் பேசிய குரலில் தெளிவு இல்லை. துக்கமும் துயரமும் இழையோடின. அவள் டாக்டர் ஆனதால் சமாளிக்க முடிந்தது.

பொழுது விடிவதற்குள் சுப்புலட்சுமி போய் விட்டாள். நான் இனிமேல் தனி என்று போன்’ மூலம்