பக்கம்:முத்துச் சிப்பி.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 7 O

வேதாந்தம் அறிவித்தார். அதிகாலையில் எழுந்து குளித் துக் காலைச் சிற்றுண்டிக்காக வரும் டாக்டர் பூரீதரன் தம் அறையிலேயே சிந்தைை யில் மூழ்கி உட் கார்ந் திருந்தார்.

சுவாமிநாதன் வியப்புடன் மாடிப் படியேறி மேலே சென்று உள்ளே எட்டிப் பார்த்தார்.

  • டாக்டர் ! உடம்பு சரியில்லையா என்ன? என்று விசாரித்தார்.

'உடம்புக்கு ஒன்று மில்லை. மன சுதான் சரியாக இல்லை' என்று சொல்லிக் கொண்டே, தம் கடமை களில் நினைவு வந்தவராக அவர் கீழே இறங்கி வந்து தம அலுவல்களில் ஈடுபட ஆரம்பித்தார்.

ராதா விழித்தெழுந்து உள்ளே வந்ததும் சுவாமி நாதன் 'ஏனம்மா! அண்ணா ஒரு மாதிரியாக இருக் கிறார்? டாக்டர் காமாட்சியின் தாய் போய் விட்டா ளாம். பாவம் அந்தப்பெண்ணுக்கு இனிமேல் யார் ஆதரவு தகப்பனாருக்கும் வயசு ஆயிற்று. பாவம், அவ ளுக்கும் சிறு வயசு. தனியாக இருக்க வேண்டும்......"

ராதாவுக்கு இந்த விஷயங்களெல்லாம் ஒன்றும் சுவாரசியப்படவில்லை. "தனியாக வ ழ் வ து என்றால் இவருக்கு ஏன் பிடிக்கவில்லை?" என்றுதான் அவளுக்குத் தெரியவில்லை. சலிப்புடன் எழுந்து அவள் தோட்டத்துக்குப் போய் விட்டாள். பூரீதரன் தம் காலை அலுவல்களை முடித்துக் கொண்டு *டிஸ் பென் ஸ்ரி க்குப் போய் விட்டார்.

அதற்கப்புறம் பல நாட்கள் வரையில் அந்த வீட்டில் எதுவுமே நடக்கவில்லை. பதினைந்து தினங்களுக்கு

அப்புறம் ஒரு நாள் மாலை, ராதா கோகலே ஹாலில் நடக்கவிருந்த சங்கீதக் கச்சேரி ஒன்றுக்கு புறப்பட்டாள்.