பக்கம்:முத்துச் சிப்பி.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 71

"உன்னோடு யார் வருகிறார்கள்?' என்று விசாரித் தார் சுவாமிநாதன்.

"ஏன்?’ என்று புருவத்தை களித்துக் கொண்டே கேட்டாள் ராதா.

"தனியாகவா நீ திரும்பி வருவாய் ன்ன்று கேட்ேெறன்?

இதென்ன அசட்டுக் கேள்வி? தனியாகத் திரும்பி வந்தால் என்னவாம் என்று கேட்டு விட ராதா துடித் தாள். ஆனால் அவளை அப்படிக் கேட்க விடாமல் ஏதோ ஒன்று தடுத்து விட்டது.

'எனக்குத் தெரிந்தவர்கள் யாராவது வருவார்கள், அவர்கள் கூட வந்து விடுவேன்' என்று கூறிவிட்டு அவர் பதிலை எதிர்பாராமல் ராதா வெளியே சென்று விட்டாள்.

தெரு வழியே நடந்து சென்று கோடம்பாக்கம் ரயில் நிலையத்தை அடைந்தாள். ரயில் வந்ததும் அதில் ஏறி உட்கார்ந்து சோட்டை நிலையத்தில் இறங்கி ஒரு ரிகஷா வைத்துக் கொண்டாள். அப்பொழுது மாலை சுமார் நாலரை மணி இருக்கலாம். ஹைக் கோர்ட்டுக்கு எதிரில் இருந்த ஹோட்டல் ஒன்றிலிருந்து மூர்த்தியும் , கோபியும் வெளியே வந்து கொண்டிருந்தார் கள்.

சென்னை நகரின் ஜனத் திரளில் அரண்மனை க் காரத் தெரு வழியே செல்லும் ரிக்ஷாவில் ராதா உட்கார்ந்திருப்பது மூர்த்தியின் தீட்சண்யமான கண் களுக்குத் தெரிந்தது.

'கோபி ஒரு நிமிஷம். நான் தம்புச் செட்டித் தெருவில் ஒருவரைப் பார்க்கவேண்டும். இப்படியே பிச் ஸ்டேஷனுக்கு நடந்து போய்க்கொண்டிரு, வந்து