பக்கம்:முத்துச் சிப்பி.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 74

வீட்டுக்கு அருகிலேயே இருக்கிறேனே. ஏன் கேட்கிறீர் கள்? உங்களோடு யாரும் வரவில்லையா?...... '

ராதா தலையைக் குனிந்து கொண்டு நின்றாள். பிறகு மெதுவாக. எனக்கு பாட்டுப் பைத்தியம் அதிகம் உண்டு, என்னவோ இந்தக் கலைகளில் ஒரு அலாதி ஆசை எனக்கு. திரும்பி எப்படி வருவது என்று யோசிக்காமல் வந்து விட்டேன்.

அருகில் சென்று கொண்டிருந்த 'டாக்ஸி' யைக் கை தட்டி அழைத்தான் மூர்த்தி.

  • அதனால் என்ன? நான் துணைக்கு வருகிறேன். வீட்டிலே கார் இருக்குமே......'

'அண்ணாவுக்கு வெளியே போக வேண்டியிருந் திருக்கும் திரும்பி வந்திருக்கு மாட்டார். இல்லா விட்டால் கார் வத்திருக்கும்... ...'

காரின் பின் nட்டில் ராதா உட்கார்ந்திருந்தாள். இரவ வேளையில் இப்படித் தனியாகப் பிற ஆடவனுடன் செல்கிறோமே என்பதை அந்தப் பேதைப் பெண் உணரவில்லை. இம்மாதிரி ஒரு தைரியம் நம் நாட்டுப் பெண்களுக்குத் தேவைதானா? தாய்க்குலத்தில் கற்பு. பண்பு, அடக்கம், பொறுமை இவற்றைப் பக்க பலமாகக் கொண்டு நம் சமுதாயம் சீரிய முறையில் இயங்க வேண்டு மென்றால் இத்தகைய நாகரிகம் தேவையா? என்பதை நாம் சிந்தித்துப் பார்க்கத்தான் வேண்டும்.

எத்தனையோ இரவுகளைப் போல் சுவாமிநாதன் ராதா இன்னும் வரவில்லையே என்று வாயிற்படியில் காத்துக் கொண்டிருந்தார். தெருவில் கார்வத் நின்றது அதிலிருந்து ராதா இறங்கினாள். வணக்கம், தாங்க் ஸ் என்று சொல்லிக் கொண்டே உள்ளே சென்றாள். மூர்த் தி யும் அங்கே இறங்கிக் கொண்டு டாக்ஸி’ ாரருக்குப் பணத்தைக் கொடுத்து அனுப்பினான்.