பக்கம்:முத்துச் சிப்பி.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 75

சுவாமிநாதள் தெரு வெளிச்சத்தில் மூர்த் இயின் முகத்தைக் கவனித்தார். அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்றார்கள் பெரியவர்கள்.

அந்த முகத்திலே தெளிவு இல்லை; அந்தக் கண்களில் உண்மையும், நேர்மையும் இல்லை. ஒரு வேளை அவ ருடைய ஊகம் தவறாகக்கூட இருக்கலாம். என்ன வோ அவருக்கு அவனை அவ்வளவாகப் பிடிக்கவில்லை.

உள்ளே சென்றவர், யாரம்மா அந்தப் பிள்ளை ?’’ என்று கேட்டார். அவள் பெண்கள் கல்லூரியில் படித்துத் தேறிய மாணவி ஆதலால், ஒர் ஆடவன் அவளுக்கு நண்பனாக இருக்கமுடியாது என்பது அவர் தீர்மானம். இதுவரையில் இப்படி யாரும் அவளுடன் வந்த தில்லையே.

'தெரிந்தவர் என்று பதில் கூறினாள் ராதா.

"'என்ன அம்மா சொல்லுகிறாய்? நமக்கு ஏதாவது *-மவா? அப்படி யாரும் இதுவரையில் இங்கு வந்ததே யில்லையே?... .

""உறவு என்று சொன்னேனா, தெரிந்தவர் என்று தானே சொல் கிறேன்! "

ராதாவுக்கு அவர் ஏதோ சந்தேகமாகக் கேட்கிறார் என்பது விளங்கிவிட்டது. கோபம் வர, அவள் பெரு மூச்சு விட்டுக் கொண்டே சாப்பிட்டு முடித்தாள்.

சுவாமிநாதனுக்கோ சரி வரப் பேசத் தெரியாமல் இருந்த பொழுதிலிருந்து வளர்த்த குழந்தை என்னிடமே மறைத்துப் பேசுகிறாளே என்று கோபம் வந்த து . "இருக்கட்டும். அவளும் வயசு வந்த பெண், படித் கவள். நல்லது கெட்டதை ஆாாயும் திறமை படைத்த வள் நாமும் அவசரப் படக் கூடாது' என்று நினைத்து அவர் அத்துடன் அன்று விட்டுவிட்டார்.