பக்கம்:முத்துச் சிப்பி.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 76

பூரீதரனுடைய போக்கே அலாதியாக இருந்தது. வீட்டிலே அவர் மனத்தைக் கவர மனைவி இல்லை. ஒரே பெண் குழந்தை. பூரீதரன் வீட்டில் இருக்கும் சமயங்களில் ஜெயபூரீ பள்ளிக்கூடம் போய் விடுவாள்.

இரவில் பூரீதரன் வீட்டுக்கு வரு முன்னே படுத்துத் துரங்கிப் போவாள் ஜெயபூரீ.

ராதா பெரிய பெண்ணாக வளர்ந்து விட்டாள். அவளை நன்றாகப் படிக்க வைத்துவிட்டார் அவர். தகுந்த இடமாகப் பார்த்துக் கலியாணம் பண்ணிக் கொடுத்து விட்டால் அவள் புருஷன் வீட்டுக்குப் போய் விடுவாள்; வீட்டைச் சுற்றிச் சுற்றி வரும் பொறுப்புகள் அதிகம் இல்லை. ஆகவே தன் சகோதரியைப் பற்றித் தெரிந்து கொள்ளவோ அவள் சுதந்திரத்தில் தலையிடவோ பூரீதரனுக்கு அவகாசம் இல்லை. ஆசை யும் இல்லை.

தாமரை இலைத் தண்ணிரைப் போல இருந்தது அவர் வாழ்க்கை. அத்துடன் இந்த விஷயங்களிலெல்லாம் பெண்களுக்கு இருக்கிற அனுபவம் ஆண்களுக்குப் போதாது. சுவாமிநாதன் நாலும் தெரிந்தவர். உலக விவகாரங்களில் அடிபட்டவர். ஆகவே, அவர் தான்

ராதாவைப் பற்றி அதிகமாகக் கவலைப்பட்டார். * சமயம் வாய்க்கும்போது பூரீதரனிடம் சொல்லி விரைவிலேயே அவளுக்குக் கலியாணத்தைப் பண்ணி வைத்து விடவேண்டும்’ என்று தீர்மானித்துக்

கொண்டார்.

14 டாக்டர் வீட்டில் பவானி

அப்பொழுது புரட்டாசி மாதம். எல்லோர் வீட்டிலும் கொலு வைத்திருந்தார்கள். சுமதியின்