பக்கம்:முத்துச் சிப்பி.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 77

வீட்டிலும் பொம்மைக் கொலு வைக்கப்பட்டிருந்தது. பவானி இந்தப் பண்டி ையை வெகு உற்சாகத்துடன் கொண்டாட வேண்டும் என்று நினைத்து, தினமும் வித விதமாகச் சுமதியை அலங்கரித் தாள். தினுசு தினு சாகப் பலகாரங்கள் செய்தாள். இரவு பத்து மணி வரையில் குழந்தைகள் வீடு வீடாகச் சென்று சுண்டலும், பழங் களும் வாங்கி வந்தனர். கோவிலுக்குப் போகும் ஸ்திரீ களின் கூட்டம் தெருக்களில் நிறைந்திருந்தது. அங்கங்கே சங்கீதக் கச்சேரிகள் நடந்தன. எல்லோர் வீட்டிலிருந்தும் கணிரென்று பாட்டுக்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. சுமதியுடன், பாலுவும் ஊர் அழைக்கச் சென்றான். கொஞ்சம் பெரியவனாக பாலு இப்போது வளர்ந்திருந் தாலும், பழைய துடுக்குத் தனங்கள் அவனை விட்டுப் போகவில்லை.

இங்கே பார் சுமதி! கொட்டை கொட்டையாகக் கண்களை வைத்துக் கொண்டு நிற்கிறதே இந்த வெள்ளைக் கார பொம்மை, அது உன்னைப் போலவே இருக்கிறது' என்றான் பாலு சிரித்துக் கொண்டே.

"'என் மூஞ்சி இப்படித்தானாடா யிருக்கிறது?' என்று சுமதி கோபித்துக் கொண்டு கேட்டாள்.

இல்லை சுமதி! உன் கண்கள் அப்படித்தானே இருக்கு?’ சுமதிக்கு பாலுவுடன் பிறத்தியார் வீட்டில் சண்டை போட்டுக் கொள்ளப் பிடிக்கவில்லை, சரி, வாடா பாலு 1 என்று சொல்லிக் கொண்டே சுமதி தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள். அன்று வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. கறுத்த மேகங்கள் வான வெளி எங்கும் திரண்டு இருந்தன. 'பளிர் பளிர் 1: என்று மின்னல்கள் கீற்றுக் கீற்றாக வானத்தில் ஒரு கோடியிலிருந்து மற்றொரு கோடி வரை பளிச்சிட்டன . பேய்க் காற்று ஒன்று சுழன்று சுழன்று அடித்தது. சட சடவென்று மழைத் துளிகள் விழ ஆரம்பித்தன.