பக்கம்:முத்துச் சிப்பி.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 6

கீதம் இசைத்தன. தென்றல் வீசியது. பவானி சோர்ந்த உள் ளத்துடன் எழுந்தாள். பல் விளக்கி, முகம் கழுவி, கண்ணாடி முன் நின்று நெற்றியில் குங்குமம் இட்டுக் கொள்ள ஆரம்பித்தாள்.

"பவானி!' என்று கூப்பிட்டு இருமிக் கொண்டே எழுந்து உட்கார்ந்தான் அவள் கணவன். குங்கு மச் சிமிழை ஒரு கையில் பிடித்துக் கொண்டு நின்றிருந்த பவானி அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

செக்கச் செவேல் என்று ராஜாவைப் போல் இருந்த அந்த உருவம் தான் எப்படி வற்றி உலர்ந்து போய் விட்டது! சுருள் சுருளாக அலைபாயும் அந்தக் கிராப்பு எப்படிக் கலைந்து சிதறிப் போய் இருக்கிறது? பார்வையிலேயே தன் உள்ளத்தின் அன்பை வெளியிடும் அந்தக் கண்களின் காந்த சக்தி எங்கே மறைந்து போய் விட்டது? ஆஜானுபாகுவாக இருந்த அந்த நெடிய உருவம் எப்படிப் பூனைபோல் ஒடுங்கிக் கிடக்கிறது?

இளமையையும் இன்ப வாழ்க்கையையும் படைத்த இறைவன் ஏன் இந்த நோய் என்னும் துன்பத்தையும் கூடவே படைக்க வேண்டும்? இத்தனை கோடி இன்பங் களைப் படைத்த இறைவன் ஏன் இப்படிப் பயங்கரமான வியாதிகளைப் படைத்து, அதற்குப் பலி ஆகிறவர்க ள விதி என்று சொல்லித் தேற்ற வேண்டும்?

மதுவைப் படைத்தவன் நஞ்சைப் படைத்திருக் கிறான். மரைப் படைத்தவன் முட்களைப் படைத் திருக்கிறான். மானைப் படைத்தவன் புலியைப் படைத் திருக்கிறான். அது தான் சிருஷ் டியின் தத்துவம். யாரும் கண்டறிய முடியாத ரகசியம்.

முகத்தில் வேதன்ை விளையாட எதிரில் தங்கச் சிலை மாதிரி நிற்கும் பவானியை அவன் ஆசை திரப் பார்த்த பிறகு அமைதியான குரலில், "பவானி! இங்கே