பக்கம்:முத்துச் சிப்பி.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 7 9

அழைத் து வந்தாள். நெற்றிக் காயத்துக்கு மருந்து வைத்துக் கட்டினார் டாக்டர் ரீதரன். பிறகு கைகளை அலம்பிக் கொண்டே, 'இந்த ஊருக்கு நீங்கள் வந்த ஒரு வருஷமாகிறது. நம் வீட்டுப் பக்கமே வருவதில்லை. பாலு அடிபட்டுக் கொண்டதால் இன்று வந்திருக் கிறர்கள்? வெளியிலேயே அதிகமாக எங்கேயும் போக மாட்டீர்களோ?' என்று கேட்ப ார்.

'போவதில்லை. வீட்டிலேயே வேலை சரியாகப் போய் விடுகிறது. ஒழிந்த வேளைகளில் எதையாவது படித்துக் கொண்டே இருப்பேன்' என்றான் பவானி.

பவானி வீட்டைச் சுற்று முற்றும் கவனித்தாள். அந்தச் சுவரில் பெரிய அளவில் ஒரு பெண்மணியின் படம் மாட்டப்பட்டிருந்தது. சாந்த மும், புன்னகையும் தவழும் அவள் முகம் பார்ப்பதற்கு அழகாக இருந்தது. பூரீதரனின் மனைவியின் படம் என்று பவானி ஊகித்துக் கொண் டான்.

தயக்கத்துடன் பாலுவின் பக்கத்தில் நிற்கும் பவானியைப் பார்த்து பூரீதரன். 'வாருங்கள், உள்ளே போகலாம். இந்த வீட்டில் ஒரு பெரியவர் இருக்கிறார். அவரும் உங்களைப் பார்க்க வேண்டும் என்று ஆ சைப் படுகிறார் என்று கூறியவாறு முன்னே சென்றார். ஆஜானுபாஹ"வான அவர் தோற்றத்தைப் பார்த்து வியந்தாள் பவானி. நல்ல சிவந்த நிறம், உயர துக் கேற்ற பருமன்; நீண்ட கூர்மையான நாசி, ஆழ்ந்து சிந்திக்கும் அமைதியான கண்கள். குழந்தையைப் போன்ற களங்கமில்லாத மனம்,

சிாப்பிடும் கூடத்தை மூவரும் அடைந்தார்கள். இதற்குள்ளாகவே ஜெயரீ, பவானி வந்திருப்பதைச் சுவாமிநாதனுக்குத் தெரிவித்து விட்டாள். அவள் வருவதைக் கவனித்த சுவாமிநாதன் * வாம்மா! நீ