பக்கம்:முத்துச் சிப்பி.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 80

இந்தப் பக்கமே வருவதில்லையே! என்று அழைத்துப் பேசினார். கொஞ்சம் ஒவல்டின் கரைத்து மேஜை மீது தயாராக இரண்டு தம்ளர்களில் வைத்திருந்தார். சாப்பிடு குழந்தை' என்று பாலு விடமும் பவானி யிடமும் கொடுத்தார்.

எதற்கு? அதுவும் மணி எட்டடிக்கப் போகிறது. முவளை சமயம் இல்லாமல் சாப்பிடுவதா?’ என்று சிரித்துக் கொண்டே கூறினாள் பவானி.

சுவாமிநாதன் அதற்குப் பதில் சொன்னார் : இல் லாவிட்டால் நீ சாவகாசமாய் எங்கே எங்கள் வீட்டுக்கு வரப் போகிறாய்? நீ தான் வெளியில் அதிகம் வருவதே இல்லையே... அதுவும் நல்லதுதான் அம்மா. கண்ட வேளைகளில் பெண்கள் வெளியில் திரியாமல் இருந்தால் தான் அவர்களுக்கு மதிப்பும், கெளரவமும் அதிகம் ஏற் படும்...'

பவானி ஒன்றும் பேசாமல் சுவாமிநாதன் பேசு வதைக் கவனித்துக் கொண்டிருந்தாள். பிறகு, * நான் வருகிறேன் . ராதா எங்கே காணோம்? நம் வீட் டுப் பக்கமே வருவதில்லை. அவளைப் பார்த்து மூன்று நான்கு மாசங்களுக்கு மேல் ஆகிவிட்டது. மன்னிகூட அவள் வருவதில்லை என்று குறைப்படுகிறாள்' ' என்று கூறியவாறு இளம்பினாள் .

சுவாமிநாதனின் முகம் வாட்டமடைந்தது. ச. ராதாவா? அவளுக்கு ஏகப்பட்ட அலுவல் அவள் இல்லாமல் ஊரில் ஒரு நாடகம், சங்கீதக் கச்சேரி, சினிமா சங்கங்கள். கடற்கரை ஒன்றும் வளராதாம். எங்கே யாவது எதற்காவது போயிருப்பாள். அவளை இப்படியே டக் கூடாதம்மா. சீக்கிரத்திலேயே ஒரு கல்யாணத்தை பண்ணி ஆக வேண்டும்' என்றார் சுவாமிநாதன்.