பக்கம்:முத்துச் சிப்பி.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I & I

'அதுவும் சாமானியமாக நடந்துவிடுகிற காரியமா சுவாமி? ராதாவுக்கு ஒரு புருஷனைத் தேடிப் பிடித்து நீங்களும், நானும் கல்யாணம் பண்ணி வைத்துவிட முடி யுமா? அவளே தேர்ந்தெடுத்துச் சொல்லப் போகிற வனைத்தான் நாம் அவளுக்குக் கல்யாணம் பண்ணி வைக் கும்படி இருக்கும்’ ’ என்றார் பூரீதரன் ,

'அவ்வளவு துாரம் அந்தப் பெண்ணுக்கு என்ன தெரி யும்? நீங்கள் இதுவரைக்கும் கொடுத் திருக்கிற செல்லம் போதும. அந்த அளவுக்கு வேறு இடம் கொடுத்து விடா தீர்கள்’’ என்று கேட்டுக்கொண்டார் சுவாமிநாதன்.

பவானி வீடு திரும்பும்போது ராதாவைப் பற்றிப் பலவிதமாக எண்ணமிட்டாள். * பாவம், அந்தப் பெண்ணைச் சரியான முறையில் வளர்க்கத் தாயும் தந்தையும் இல்லை. உடன் பிறந்தவர் தம் தொழில்

ஒன்றையே பிரதானமாகக் கொண்டவர். அத்துடன் குடும்ப வாழ்க்கையில் அவ்வளவு அனுபவம் அடையாத வர். நல்ல இடத்தில் ராதா வாழ்க்கைப்பட்டுச் சந்

தோஷமாக இருக்க வேண்டும்' என்று நினைத்துக் கொண்டே வீட்டுக்கு வந்தாள்.

15. காதல் வேகம்...!

இங்கே வீட்டில், சுவாமிநாதன ராதா வைப் பற்றிக கவலையுடன் பேசிக் கொண்டிருக்கும்போது சென்னை நகரின் பிரபலமான ஹோ-டல அறைஒன்றில் ராதாவும் மூர்த்தியும் உட்கார்ந்து சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் . அடையாறு பக்கம் நாட்டிய நிகழ்ச்சியைப் பார்க்கக் கிளம்பியவர்கள், மழை பிடித்துக் கொள்ளவே நேராக டவு னுக்குச் சென்று, ஹோட்டல் ஒன்றில் நுழைந்தார்கள். அங்கே விதம் விதமாகத்

மு. சி-12