பக்கம்:முத்துச் சிப்பி.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 8 o'

திரியும் நாகரிகம் மிகுந்த ஆடவர்களும், பெண்களும் கட்டங் கூட்டமாக வளைய வந்தனர். பீங்கான் கோப் பைகளின் சத்தமும், கலீரென்று எழும் சிரிப்பும், ' கம்’ மென்று எழும் வாசனையும் அதை சுவர்க்க லோகமாக மாற்றி இருந்தது. அண்மையில் சாக்கடை ஒரங்களில், மழைத் தண்ணிர் சொட்ட வாடும் மக்களும் இருக்கிறார் கள் என்பதை ஹோட்டலுக்குள் இருந்த ஒரு சிறு கட்டம் அறவே மறந்து இருந்தது என்று கூடச் சொல்ல லாம்.

மூர்த்தியும் ராதாவும் அறையை விட்டு வெளியே வந்தார்கள். சற்றுத் தொலைவில் நாகராஜன் தன் வியாபார நண்பருடன் பேசிக்கொண்டே ஒரு மேஜை அருகில் உட்கார்ந்திருந்தான். ராதா இரண்டடி பின் வாங்கினான்.

இப்படி வாருங்கள். அவர் என் அண்ணாவுக்குத் தெரிந்தவர். நாம் இப்படி வெளியில் சுற்றுவதைப் பார்த்தால் ஏதாவது...' என்று மெதுவாகச் சொல்லிக் கொண்டே அறைக்குள் சென்றாள் ராதா மறுபடியும்.

ஒகோ யார் அவர்?' என்று கேட்டான் மூர் த்தி.

கோடம்பாக்கத்தில் தான் இருக்கிறார். ரொம்ப வும் தெரிந்தவர்: அவர் மனைவி ஒரு நிரந்தர நோயாளி. அவருக்கு ஒரு தங்கை இருக்கிறாள். விதவை. பார்ப்ப தற்கு ரொம்பவும் நன்றாக இருக்கிறாள்....பாவம்...'

"அப்படியா? இவ்வளவு சோஷியலாக இருக்கிற மனுஷர், தங்கைக்கு ஏன் மறுமணம் செய்து வைக்கக் கூடாது?’’

'அவர் செய்து வைத்தாலும், தங்கை சம்மதிக்க மாட்டாளே. அவள் என் னவோ இப்பொழுதே அறுபது வயசு பாட்டி மாதிரி பூஜையும், பக்தியும் பிரமாதப் படுத்துகிறாள். எனக்கு அதெல்லாம் கட்டோடு பிடிப்பதில்லை. '