பக்கம்:முத்துச் சிப்பி.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 83

பிடிக்காவிட்டால் போகிறது.

'உனக்கு இன்னும் கல்யாணமே ஆகவில்லையே... இனிமேல் தானே ஆகப்போகிறது. பிறகு தான் பக்தி, அது இது என்று ஏற்படும். '

ராதா, வாசல் திரையைத் தள்ளிக் கொண்டே

வெளியே எட்டிப் பார்த்தாள். நாகராஜன் அங்கு (...) மல்ை ն1) -

'வாருங்கள் போகலாம்...' என்று கூறியதும் மூர்த்தியும், அவளும் வெளியே வந்தார்கள். மழை பெய்து தரையில் ஒரு ஒரமாக ஜலம் தேங்கிக் கொண் டிருந்தது. தவறிப் போய் ராதா தண்ணிரில் காலை வைத்துவிட்டாள். 'ஐயையோ!' என்று சொல்லிக் கொண்டே அவள் தண் ணிரைத் தாண்டப் போக மூர்த்தி அவள் கீழே விழுந்து விடப் போகிறாளே என்று கைகளைப் பலமாகப் பிடித்துக் கொண்டான்.

வெகு சமீபத்தில், வக்கீல் வேதாந்தத்தின் கார் நின்று கொண்டிருந்தது. பழக்கமான குரல் அருகில் கேட்கவே, டாக்டர் காமாட்சி வெளியே எட்டிப் பார்த்தாள். ராதாவை அவளுக்குத் தெரியும். ' என்ன அப்பா இது? டாக்டர் ரீதரனின் தங்கைதானே, அந்தப் பெண்? கூட இருக்கிற பையன் யார் என்று தெரியவில்லையே? உ. ம் ..

வேதாந்தம் வெளியே பார்த்தார். மூர்த்தியும் ராதாவும் தொலைவில் சென்று விட்டார்கள்.

'அவள்தான் அம்மா! அந்தப் பையன் யார் என்று தெரியவில்லையே! அறியாத பெண் இப்படி இந்த ஊரில் தெருவில்... டாக்டர் பூரீதரனுக்கு ஒன்றுமே தெரியவில்லை. வயசு வந்த பெண்ணை எதற்கு வீட்டில் வைத்துக் கொண்டிருக்க வேண்டும்? பனமா இல்லை? காலாகாலத்தில் கல்யாணத்தைப் பண்ணி விடுவது