பக்கம்:முத்துச் சிப்பி.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

மெரினா டற்கரையிலும், வேறொரு ஹோட்டலிலும் பார்த்து விட்டார். அந்தப் பிள்ளை யார்?' என்று எப்படியாவது விசாரித்துத் தகவல் சேகரிக்க முயன்றார். இதற்குள் ஊரில் ராதாவைப் பற்றிப் பல தினு சாகப் பேச்சுக்கள் அடிபட்டன . அதனால் மேலும் அவர் இதைப்பற்றி யாரிடமும் விசாரிக்கக் கூடாது என்று தீர் மானித்து, தாமே டாக்டர் பூரீதரனிடம் இதைப் பற்றிப் பேசி ஒரு ஏற்பாடு செய்யவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார். இதை அவர் தம் மகளிடம் கூறியதும், 'அப்படித்தான் செய்ய வேண்டும் அப்பா ! நீங்களே இதைப் பற்றி அவரிடம் சொல்லுங்கள். நான் கூறினால் அவ்வளவு நன்றாக இருக்காது. நீங்கள் வயதிலும், அனுபவத்திலும் பெரியவர். நீங்கள் சொல்வது தான் நல்லது என்றாள் காமாட்சி.

வேதாந்தத்துக்கு அவள் கூறுவது சரியென்று தோன் றியது. ஆகவே காரில் டாக்டர் பூரீதரனின் வீட்டை நோக்கிக் கிளம்பினார் அவர் அங்கு அவர் போய்ச் சேர்ந்தபோது டாக்டர் வீட்டில் இல்லை. சுவாமி நாதன் மட்டுமே உட்கார்ந்திருந்தார். சில மாதங்களுக்கு முன் பார்த்தபோது அவர் தெம்பாகவும் திடமாகவும் காணப்பட்டார். திடீரென்று வயசு அதிகமாகி விட்ட வர் போல் அவர் தோற்றத்தில் ஒரு மாறுதல் ஏற்பட் டிருந்தது. வேதாந்தத்தைப் பார்த்ததும் அவர் 'வாருங்கள், ரொம்ப நாளாயிற்று உங்களைப் பார்த்து ' என்று வரவேற்று , அவரை உட்காரும்படி கூறினார்.

  • எங்கே இப்படி? டாக்டரைப் பார்க்க வந்தீர்களா? வீட்டில் மகள் செளக்கியந்தானே? என்று விசாரித்தார் சுவாமிநாதன்.
  • எல்லோரும் செளக்கியமாகத்தான் இருக்கிறோம். டாக்டரைப் பார்க்க வேண்டும் என்றுதான் வ சில விஷயங்கள் பேச வேண்டும்... .