பக்கம்:முத்துச் சிப்பி.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

வாயேன், இப்படி வந்து என் பக்கத்தில் உட்கார்' என்று ஆசை பொங்க அழைத்தான்.

பவானி பதில் ஒன்றும் கூறாமல் அவன் அருகில்

சென்று உட்கார்ந்தாள். மெலிந்து போயிருந்த தன்

கையால் அவள் இடுப்பைச் சுற்றி அணைத்தவாறு அவன்

அவள் கையிலிருந்த குங்குமச் சிமிழை வாங்கிக் கொண்டான். அன்புடன் அவள் முகவாயைப் பற்றித் தன் முகத்துக்குநேராக அவள் முகத்தைத் திருப்பினான்.

ஆள் காட்டி விரலைச் சிமிழுக்குள் தோய்த்துக் குங்கு மத்தை எடுத்து அவள் நெற்றியில் வட்ட வடிவமாகப் பொட்டு வைத்தான்.

பவானியின் கண்கள் குளமாக இருந்தன. உதடுகள் துடித்தன. நெஞ்சுக் குமிழ் திக் திக் கென்று அடித்துக் கொண்ட து.

பவானி! ஏன் அழுகிறாய்? என்று கவலை தொனிக்கக் கேட்டான் அவன்.

அவள் பதில் பேசவில்லை.

பைத்தியம்! நான் போய் விடுவேன் என்றுதானே அழுகிறாய்? பிறந்தவன் இறப்பது உறுதி என்று கீதை

படித்து எனக்கு உபதேசம் செய்தாயே! அதற: குள்ளாகவே மறந்து விட்டாயே பவானி?’’

'ஆம்' என்கிற பாவனையாக அவள் கண்ணிருக் கிடையில் தலையசைத்தாள்.

நான் பூமியில் பிறந்தேன். இன்றோ நாளையோ இறக்கப் போகிறேன். நான் பிறந்தது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை இறக்கப் போவதும்......' என்று அவன் இன்னும்iஏதோ முனு. முணுத்துக்கொண்டே இருந்தான்.