பக்கம்:முத்துச் சிப்பி.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 & 8

இடங்களிலும் பார்த்தேன். என் மனசுக்கு ஒன்றும் சரி யாகத் தோன்றவில்லை . . .

சுவாமிநாதன் மெளனமாகவே உட்கார்ந்திருந்தார். அவர் மனத்தில் வேதனை நிறைந்திருக்கிறது. பேச முடியாமல் உணர்ச்சிகளை மனத்தில் புதைத்துக் கொண்டு அவர் உட்கார்ந்திருக்கிறார் எ ன் ப து வேதாந்தத்துக் குப் புரிந்தது.

'நான் இப்படிச் சொல்கிறேனே என்று வருத்தப் படாதீர்கள். டாக்டருடைய குடும்ப நண்பன் நான் . அவரைச் சிறு பிராயத்திலிருந்து அறிந்தவன். இந்தக் குழந்தை ராதாவுக்கு காப்பிட்ட அன்று என் மனைவி வந்திருக்கிறாள் இந்த வீட்டுக்கு 1

"அப்படியெல்லாம் உங்களை நான் தவறாகப் புரிந்து கொள்ளவில்லை. மனசைச் சங்கடப்படுத்தும் விஷயமாக இருக்கவே எனக்கு வருத்தமாக இருக்கிறது. டாக்டர் வந்ததும் அவரிடம் கூறி ஏதாவது ஏற்பாடு செய்கிறேன் என்றார் சுவாமிநாதன். வேதாந்தம் மனத்தில் இருந்த பாரம் நீங்கப்பட்டவராகக் கிளம்பிச் சென்றார்.

சுவாமிநாதன் அந்த வீட்டுச் சமையற்காரர் மட்டும் அல்ல. அந்தக் குடும்பத்தினரின் நம்பிக்கைக்குப் பாத் திர மான ஒரு நண்பர் அவர். வீட்டிலே பெண் துணை இல்லாமல் இருக்கையில் தாயும் தந்தையுமாக இருந்து, இரண்டு பெண் குழந்தைகளை வளர்த்து வருகிறவர். 'கல்லூரியில் சிறு சம்பவம் நடந்தாலும், தன்னிடம் ஒன்று விடாமல் கூறும் ராதாதான் எப்படி மாறி விட் டாள். ஒவ்வொன்றையும் மறைக்க அவளுக்குச் சாமர்த் தியம் வந்து விட்டது. இப்படி மறைத்து வைத்துப் பாழும் பெண் ஏதாவது ஆபத்தில், மானக்கோட்டில் சிக்கிக் கொண் டுவிட் டால் என்ன பண்ணுவது? டாக்டர்