பக்கம்:முத்துச் சிப்பி.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 9 O

புறம் போட்டு, அதில் கட்டியிருந்த ரிப்பனை முறுக்கிய படி மெல்லிய குரலில் பாட்டு ஒன்றைப் பாடிக் கொண்டிருந்தாள் அவள் .

காதலெனும் தீவினிலே ராதே! ராதே 1-அன்று

கண்டெடுத்த பெண்மணியே ராதே ! ராதே !

காதலெனும் சோலையிலே ராதே! ராதே-நின்ற

கற்பகமாம் பூந்தருவே ராதே ! ராதே!

என்னும் பாட்டு மெதுவாக இனிமையாகக் கேட்டுக் கொண்டிருந்தது.

பூரீதரன் சிறிது நேரம் பாட்டில் லயித்து அங்கேயே நின் றிருந்தார் ւ rrլ - (Ջ՝ முடிந்ததும் அறைக்குள் சென்று, அவள் எதிரில் இருந்த சோபாவில் உட் கார்ந் தார்.

திடீரென்று அண்ணா வந்ததை அறிந்ததும் ராதா திடுக் கிட்டு நிமிர்ந்து உட் கார்ந்து கொண்டாள். அவள் சற்று முன் பாடிய பாட் ை- நினைத்தபோது அவளுக்கே வெட்கமாக இருந்தது.

பூரீதரன் தன் சகோதரியைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே என்ன அம்மா ! என் னைக் கண்டதும் பாட்டை நிறுத்தி விட்டாய்? என்று கேட்டார்.

' 'பாட் டா?... என்னவோ அந்தப் பாட்டு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

' என்ன பாட்டு அது: 'காதலெனுந் தீவினிலே

ராதே ராதே என்ற பாட்டல்லவா? காதலைப் பற்றிக் கூட உனக்குத் தெரிந்து விட்டது 1

' 'போங்கள் அண்ணா! என்னைக் கேலி செய்யாதீர் கள்! என்றாள் ராதா. அவள் முகம் வெட்கத்தால் சிவந்து காணப்பட்டது.