பக்கம்:முத்துச் சிப்பி.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 9 3

எனக் குத் தலையை வலிக்கிறது. எங்கோ போகிற

மாதிரி இ. ரு க் கி ற து அத்தை. டாக்டரை նմց வழை யேன்...

பவானி அவசரமாக டாக்டர் பூனிதரனைப் போனில் கூப்பிட்டாள். "குழந்தைக்கு ஜூரம் அடிக்கிறது. மாற்று மூன்றுக்கு மேலே இருக்கலாம். உடனே வர வேண்டும்’ ’ என்று கேட்டுக் கொண்டாள்.

காலையில் டாக்டரிடம் சுவாமிநாதன் ராதாவின் விஷயத்தைக் கூறினார். அன்று மாலையே அவர்கள் வீட்டுக்கு ராதா, மூர்த்தியை யாரும் எதிர்பாராத விதமாக அழைத்து வந்தாள் .

"அண்ணா! இவர் தான் மூர்த்தி என் கிறவர் என்று கூறி, அவன் வேலை பார்க்கும் அலுவலகத்தைப் பற்றியும் தெரிவித்தாள். டாக்டர் பூரீதரன் மூர்த்தியை ஒரு கணம் நிதானித்து நிமிர்ந்து பார்த்தார்.

' உட்காருங்கள். நீங்கள் இருப்பது சென்னையிலா? பெற்றோர் எங்கே இருக்கிறார்கள்?’ என்றும் விசாரித் தார் .

இதற்குள் சுவாமிநாதன் ஆவலே உருவாக அவசரத் துடன் ஹாலுக்கு வந்தார். ஆசையுடனும், ஆர்வத்துட னும் தான் வளர்த்த ராதாவின் கரம்பிடிக்கப் போ கும் புருஷ னைப் பார்த்தார். டாக்டர் பூரீதரனைப் பார்த்துப் புன் முறுவல் பூத்த மூர்த்தி, சுவாமிநாதனைப் பார்த்த தும் முகத்தைச் சுளித்துக் கொண்டான்.

" "ஆமாம், உங்கள் குடும்பத்தில் பெரியவர்கள் இருக் கிறார்களா? கல்யாண விஷயமாக யாரைக் கலந்து பேச வேண்டும்? விலாசம் கொடுங்கள் . எழுது கிறேன் என்று கேட்டார் பூரீதரன்.

மூர்த்தி ஒரு மாதிரியாகச் சிரித்தான்.