பக்கம்:முத்துச் சிப்பி.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 9 5

'போனில் அழைத்தாள் அவர் அவசரமாக எழுந்து உள்ளே சென்று தம் கைப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியே புறபபட்டார்.

நாகராஜன் வீட்டிலிருந்து போன்’ வந்திருக்கிறது. சுமதிக்கு ஜூரமாம். பவானிதான் போன் பண்ணியிருக் கிறாள். நான் அப்படியே இன்னும் சில நோயாளி களைப் பார்த்துவிட்டு வருகிறேன் என்று கூறி, மூர்த்தி

யிடம் விடை பெற்றுக்கொண்டு கிளம்பினார் டாக்டர்.

பவானி என்கிற பெயர் மூர்த்தியின் மனத்தில் ஒரு வித அதிர்ச்சியைத் தந்தது. சாப்பிட்டுக் கொண்டிருந்த காப்பியை பாதி அப்படியே வைத்துவிட்டுச் சிறிது யோசித்தான். சென்னை நகரிலே எத்தனையோ பவானிகள் இருப்பார்கள். இதென்ன பைத்தியக் காரத் தனம் என்றுகூட அவன் நினைத்தான். இருந்தாலும் அந்தப் பெயர் அவன் மனத்தில் ஒரு வித அச்சத்தையும் சலனத்தையும் உண்டாக்கியது.

செல்வமும் சீரும் நிரம்பிய இந்தப் பெண் னைக் கல்யாணம் செய்து கொள்வதற்கு முன்பாக ஏதாவது கடங்கல் நேர்ந்து விடுமோ என்று அஞ்சினான் மூர்த்தி.

‘'என்ன, யோசனை பலமாக இருக்கிறது? என்று கேட்டுக் கொண்டே ராதா அவன் அருகில் வந்து நின்றாள். சுவாமிநாதன் ஏதோ அலுவலாக எழுந்து உள்ளே சென்று விட்டார் .

முர்த்தியின் கம்பீரமான உருவத்தைப் பார்த்துப் பரவச மெய்தினாள் அந்தப் .ே ப ைத ப் பெண் . அவனுடைய ஆழ்ந்த பார்வையும், கபடச் சிரிப்பும் அவள் மனதுக்குப் பிடித்துப் போயிற்று. அவன் மேல் உண்மையான அன்பு- அதாவது காதல்- ஏற்பட்டது அவளுக்கு .