பக்கம்:முத்துச் சிப்பி.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 6

காதலர்கள் இருவரும் அந்த வீட்டுத் தோட்டத்து ஊஞ்சவில் உட் கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள் வெகுநேரம்.

நாகராஜனின் வீட்டில் சுமதிக்கு டாக்டர் பூரீதரன் வந்து பார்த்தபோது ஜூரம் அதிகமாகத்தான் இருந்தது. மருந்து கொடுத்துவிட்டு, ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளும்படி பவானியிடம் கூறினார் அவர்.

முதலில் சாதாரண ஜூரம் என்று தான் எல்லோரும் நினைத் திருந்தார்கள். நாலைந்து நாட்களுக்கு அப்புறம் ஜுரத்தின் வேகம் அதிகமாயிற்று . தன் நினைவை இழந்து படுக்கையில் கிழித்த நார் போல் கிடந்த சு மதியைப் பவானியும், கோமதியும் நாகராஜனும் கவலையுடன் பார்த்தார் கள்.

பூர்தரன் "டைபாய்ட் ஜூரமாக இருக்கலாம் என்று அபிப்பிரா யப் பட்டார். கோமதி வெல வெலத்துப் போய்விட்டாள். அவளுக்குத் தலையைச் சுற்றி மயக்கம் வரும் போல் ஆகி விட்டது.

அதனால் ஒன்றும் பயமில்லை. மூன்றாவது வாரம் இறங்கிவிடும். பயப்படாதீர்கள்’ ’ என்று தைரியம் கூறினார் டாக்டர்.

பவானியின் மனத்தில் சொல்ல முடியாத வேதனை நிரம் பியிருந்தது. வியாதிக்காரர்களைப் படுக்கையில் படுக்க வைத்துச் சிகருவுை செய்யவே அவள் பிறந்தவள் போலும் ! கனவன் வாசுவைப் பல மாதங்கள் படுக்கை யில் வைத்துப் பணிவிடை செய்தாள். அதன் பிறகு கோமதியை மூன்று மாதங்கள் வரையில் கவனித்துச் கொண் டாள் . இப்பொழுது சுமதி கிடக்கிறாள். இந்தப் பாழும் கையினால் யாருக்கும் ஒன்றும் நேரக் கூடாதே ! என்று பவானி மனதுக்குள் கு மைந்து

போனா ள்.

o