பக்கம்:முத்துச் சிப்பி.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

197

அப்பொழுது இரண்டாவது வாரம் ஆரம்பம். ஜ ரம் மும்முரமாக இருந்தது. நோயாளியின் அருகில் இருந்து அல்லும் பகலும் பணி புரிய ஒருவர் தேவை மான் பது டாக்டர் பூரீதரனின் அபிப்பிராயம். இதை அவர் கூறிய போது நாகராஜனும் கோமதியும் ஒரு நர் ஸை ஏற்பாடு செய்யும் படி அவரிடம் கேட்டுக் கொண்டார்கள். ஆனால், ஜுரவேகத்தில் பிதற்றும் போதுகூட அந்தப் பெண். அத்தை, அத்தை, என்று அழைப்பதைக் கவனித்த டாக்டர், அருகில் நிற்கும் | வானியைப் பார்த்தார். ஏனம் மா குழந்தை உங்க ளிடம் அதிகப் பிரியம் போல் தோன்று கிறதே, உங்களால் அவளைக் கவனித்துக்கொள்ள முடியுமா? இல்லை,

ஆஸ்பத்திரியில் சேர்த்து விடலாமா?' ' என்று கேட்டார்.

பவானி நீர் நிறைந்த கண்களுடன் அவரை ஏறிட்டுப் பார்த்தாள். நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் என்ன வெல்லாம் செய்யச் சொல் கிறீர்களோ, அதன் படியே நடந்து கொள்கிறேன். குழந்தையை ஆஸ்பத்திரி யில் சேர்க்க வேண்டாம்... ' என்றாள்.

தன் தமையனின் குல விளக்கு அணையாமல் இருக்க வேண்டும்; அந்த வீட்டிலே இன்பம் நிறைய வேண்டும் என்கிற எண்ணம் ஒன்றே பவானியை நர் ஸாக மாற்றி யது. படித்து அவள் அந்தத் தொழிலுக்கு வரா விட்டா லும், மனத்தில் இருந்த ஆவல் அவளை அத் தொழிலைச் சீக்கிரம் கற்றுக் கொள்ளும்படிச் செய்தது.

பவானி நோயாளியின் அறைக்கு அடுத்த தாழ்வாரத் தில் தனக்கென்று படுக்கை அமைத்துக் கொண்டாள். மாடியை விட்டு அவள் கீழே போவதில்லை. பாலு வைக்

கூடப் பாராமல் சுமதியின் அருகிலேயே இருந்து கவனித்து வந்தாள்.

மு. சி-13