பக்கம்:முத்துச் சிப்பி.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. ராதாவின் கல்யாணம்

ராதாவின் கல்யாண வைபவங்கள் அமர்க்களமாக நடைபெற்றன. பசு மலையிலிருந்து கல்யாணராமன், டாக்டர் பூரீதரனுக்கு கடிதம் எழுதியிருந்தார். 'பெண்ணும் பிள்ளையும் மனம் ஒப்பிக் கல்யாணம் செய்து கொள்கிற படியால், பெரியவர்களாகிய நாம் அதை உடன் இருந்து நடத்த வேண்டியது ஒன்றுதான் செய்யக் கூடியது. மிகவும் சந்தோஷம். நாங்கள் அவசியம் வருகிறோம்-என்று கடிதம் வந்தது. பிள்ளையைச் சேர்ந்தவர்களில் பெரியவர்களாகச் சிலர் இருக்கிறார் கள். பரவாயில் லை என்று சுவாமிநாதனுக்கு ஒரு மகிழ்ச்சி.

இந்தக் கல்யாண ஏற்பாட்டில் நாகராஜன் வீட்டார் கலந்து கொண்டிருப்பார்கள். ஆனால், எத்தனையே r இரவுகள் பவானி, டாக்டர் பூரீதரனுடன் போனில் பேசினாள்.

‘குழந்தை தூங்காமல் ரொம்பவும் சிரமப்படுகிறான். என்ன செய்வது?’ என்று யோசனை கேட்டிருக்கிறாள். அவர் கூறியபடியே செய்ததாகவும் பதில் கூறுவாள் பவானி. இந் நிலையில் கோமதியும் நாகராஜனும் மன மிடிந்து உட்கார்ந்திருந்தார்கள். யார் வீட்டில் என்ன நடக்கிறது என்பதே இவர்கள் வீட்டுக்குத் தெரிய வில்லை.

மூன்றாவது வாரம் ஆரம்பித்த பிறகு சுமதியின் நிலையில் மாறுதல் ஏற்பட்டது. ஜூரம் தணிந்து கொண்டே வந்தது. கண்ணை விழித்துத் தன் அருகில் நிற்பவர்களைப் பார்த்தாள் அந்தப் பெண். ஜன்னல் ஒரமாக நின்று கவனித்த பாலுவை அவள் கண்கள் கவனித்தன.