பக்கம்:முத்துச் சிப்பி.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:: O Q

ஏதோ யோசனையில் ஆழ்ந்து இருக்கிற மாதிரி தோன்றியது.

。畢 .הרץ H H- 圖 அங்கிருந்த பேஸினி'ல் கை அலம்பிக் கொண்டே பவானி கொடுத்த துண்டை வாங்கி கைகளை , துடைத்து கொண்டார் அவர்.

பொறுமையும் அன்பும் அழகும் உருவான அந்தப் பெண்ணினுடைய சோகச் சித்திரத்தை அவர் ம ைம் ஆராய்வதில் சிறிது நேரம் சென்றது. இந்தப் பெண்ணின் வாழ்க்கை இப்படியே கழிய வேண்டியதுதானா? தமை பன் வீட்டு க்கு உழைக்கிறாள். தனக்காக இல்லாமல் பிறருக்காக உழைக்கும் உழைப்பில் இன்பம் காணு கிறாள். பவானியின் உள்ளம் எவ்வளவு விசாலமானது? மாசு மருவற்று இருக்கும் இந்த உள் ளத்தில் "த ைக்கு ' என் கிற எண்ணமே இருக்காதா? எத்தனை பெண்கள் இந்தப் பவானியைப் போல நம் நாட்டில் இருக்கிறார்கள்? பெண் என்றால் தியா கம் என்பதுதான் பொருளோ?

கையை மறுபடி மறுபடி அழுத்தித் துடைத்துக் கொண்டே நிற்கும் பூரீதரனின் முகத்தைப் பார்த்த பவானி, டாக்டர் 1’ என்று அழைத்தாள்.

பவானி உங்களுடன் நான் சாவகாசமாகச் சில விஷயங்கள் பேசவேண்டும். ஒன்று சொல்ல மறந்து விட்டேன. அடுத்த திங்கட்கிழமை ராதாவுக்கு கல்யா ைம், பத்திரிகை வரும். நீங்கள் எல்லோரும் வரவேண் டும். அதற்குள் சுமதிக்கு உடம்பு சரியாகி விடும். ஆனால் படுக்கையை விட்டு எழுந்திருக்கக்கூடாது’’ என்றார் பூரீதரன் .

அதன் பிறகு இரண்டு மூன்று நாட்கள் வரை யில் அவர் வரவில்லை. கல்யாணப் பத்திரிகை மட்டும் வந்தது . மேஜை மீது கிடந்த அந்தப் பத்திரிகையை

எடுத்துப் பார்த்தாள் பவானி.