பக்கம்:முத்துச் சிப்பி.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 02

விஷயம்? டாக்டர் ரீதரன் இந்த மாப்பிள்ளையை எங்கே தேடிப் பிடித்தார்?' என்றெல்லாம் எண்ணிை வியந்தாள் பவானி.

பவானி, மாப்பிள்ளை நன்றாகத்தான் இருக் கிறான்' என்று கோமதி திதன் அபிப் பிராயத்தைக் தெரிவித்தாள்.

ஊர் வலம் மெல்ல நகர்ந்து போய்க் கொண்டிருந்தது. கூட்டத்தில் பார்வதி அம்மாளின் தலை தெரிந்தது. பசுமலையில் தன்னிடம் தாயை விட அன்பாக இருந்த அந்த அம்மாளைப் பார்த்துப் பேசவேண்டும் என்று பவானி ஆசைப்பட்டாள்.

கல்யாணராமன் பூரீதரனுடன் பேசிச் சிரித்தவாறு சென்றார். இடையில் ஜெயபூரீ பட்டுப் பாவாடையும் தாவணியும் அணிந்து இவர்கள் வீட்டுக்கு வந்தாள். நேராக மாடிக்கு வந்து. 'மாமி , சுமதி எப்படி இருக்கிறாள்?' என்று விசாரித்தாள். அறைக்குள் எட்டிப் பார்த்து விட்டு, அடுத்த அறையில் உட்கார்ந்து பாடம் படித்துக் கொண்டிருந்த பாலு வைப் பார்த்தாள். பாலு முன் னைவிட இப்போது உயர்ந்து இருந்தான்.

பாலு, எங்கள் வீட்டுக் கல்யாணத்துக்கு வாயேன்' என்று அழைத்த ஜெயபூரீயை ஏறிட்டுப் பார்த்தான் அவன். ஜெயபூரீயும் வளர்ந்துதான் இருந்தாள்.

உங்கள் வீட்டுக் கல்யாணத்திற்கு வந்தால் என்ன

தருவாய் ஜெயபூரீ?"

"ஆமாம். குறும்பைப் பார். கல்யாணத்துக்கு வந்தால் என்ன கிடைக்கும்? லட்டும் பாயசமும் கிடைக்கும்... நா ைள க் கு உனக்கும் சுமதிக்கும்

கல்யாணம் ஆகும்போது எனக்கு என்ன தருவாய்? பின் ன லில் வைத்துப் பின்னப்பட்டிருந்த பட்டுக் குஞ் சலங்