பக்கம்:முத்துச் சிப்பி.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20.4

மிகவும் தணிந்த குரலில் பேசினார்கள். பவானி மூர்த்தியைப் பற்றிப் பசுமலையிலேயே அவர்களிடம் ஒன்றும் சொல்லியதில்லை. அவர்களும் பேசியதில்லை. இத்தனை நாட்களைப் போல் மூர்த்தி ஒண்டிக் கட்டை அல்ல. இல் வாழ்க்கைக் குத் திரும்பியிருக்கும் அவன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் கண்டுதான் ஆகவேண்டும் என்று எல்லோரும் தீர்மா னித்தார்கள்.

கல்யாணம் இனிதாக நடந்து முடிந்தது.

கல்யாண வீட்டில் பவானி, பார்வதியுடன் பேசிக் கொண்டிருந்ததைக் கவனித்த சுவாமிநாதன் அவளைத் தனியாக அழைத்துக் கேட்டார். 'ஏனம்மா இவர்கள் உனக்கு ஏற்கெனவே தெரிந்தவர்களா? நம் வீட்டு மாப்பிள்ளையையும் உனக்குத் தெரியுமா? என்று விசாரித்தார் பிள்ளையாண் டான் எப்படி?’ என்றும் கேட்டார்.

பவானி தயக்கத்துடன் பதில் கூறினாள். ஏற்கெனவே பசுமலையில் எனக்குத் தெரிந்தவர்கள் தான். மூர்த்தியைப் பற்றி நான் என்ன சொல்ல இருக் கிறது? மனிதன் புனிதமே உருவானவன் என்றோ குற்றங் களையே செய்ய மாட்டான் என்றோ நாம் நினைப்பது தவறு. பல்வேறு சந்தர்ப்பங்கள் அவனைக் குற்றவாளி ஆக்கு கின்றன. அவன் திருந்தி வாழவும் சந்தர்ப்பம் இருக்கிறது. ராதா படித்த பெண். கணவனை ஒழுங்கான பாதைக்கு அவள் திருப்பலாம். இல்லாவிடில் மூர்த்தியே இதற்குள் திருந்தி இருக்கலாம். நடந்த நடந்து

விட்டது. குற்றச் சாட்டுக்களையும் குழப்பங்களையும் அதிகப்படுத்தாமல் மூடிக்கொண்டு போவதுதான்

நல்லது’’ என்றாள்.

சுவாமிநாதன் பரந்த நோக்கம் கொண்ட அந்தப் பெண்ணைப் பற்றி வியப்பும் திகைப்பும் கொண்டார்.