பக்கம்:முத்துச் சிப்பி.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

இதைப் போலத்தான் இல்லற வாழ்வும் இருக்கிறது. மகனோ, மகளோ, தகுந்த வயதை அடைந்த தும் பெற்றோர் மணமுடித்து வைக்கிறார்கள். காதலனும் காதலியும் மனம் வி ட் டு ஒருவரோ டொருவர் பேசுவதற்குச் சட்டென்று பெரியவர்கள் சந்தர் ப்டம் அளிப்பதில்லை. கல்யாணம் முடிந்தவுடன் ஆ டிக்கு மருமகனை அழைக்கிறார்கள். பிறகு தீபாவளி வருகிறது. பின்னர் தைப்பொங்கல் வருகிறது. கணவனும் மனைவி யும் படிப்படியாக மனம் விட்டுப் பழகுகிறார்கள். அன்பு நிதானமாக மாம்பழத்தின் சு வையைப் போல

வளருகிறது.

ராதாவும் முர்த்தியும் கல்யாணம் பண்ணிக்கொண்ட விதமே அாைதியானது. பத்துப் பன்னிரண்டு வருஷங்கள் தம்பதிகள் பழக வேண்டிய முறையில் ஆறே மாதங்களில் அவர்கள் பழகினார்கள் ; பேசினார்கள். சி! வாழ்க்கை என்பது இதுதானோ? இதற்குத்தான் கல்யாணம் என்கிற கால்கட்டைக் கட்டிக் கொண்டோமா? " என்று மூர்த்தி

பல தடவைகள் நினைத்தான் .

ராதாவுக்கும் அவனுக்கும் கல்யாணமாகி ஏழெட்டு மாதங்களுக்குள் மூர்த்தியின் நடத்தையில் பல மாறுதல் களைக் கண்டாள் ராதா. மாதம் அவன் சம்பளத்துக்கு அந்த வீட்டில் செலவு இல்லை. அவனுடைய தேவைகள் அனைத்தையும் ராதா கவனித்துக் கொண்டாள். அவனுக்கென்று பிரத்யேகமான அறை. அந்த அறைக்கு அடுத்தாற் போல் ஸ்நானம் செய்ய அறை இருந்தது. மாடியிலேயே சகல வசதிகளும் நிரம்பி இருந்தன. சாப் பிடும்போது சில நாட்களில் மூர்த்தி கீழே வருவான். அவன் அதிகமாகத் தன் மைத்துனர் பூரீதரனுடன் பேசு வதில்லை. இருவரும் வெளியே செல்லும்போது தோட் டத்தில் சந்தித்துக் கொள்வார்கள்,