பக்கம்:முத்துச் சிப்பி.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 () 7

'ஆபீசுக்குக் கிளம்பியாயிற்றா?' என்று சிரித்த வாறு பூரீதரன் கேட்பார். மூர்த்தி புன்னகையுடன் தலையை ஆட்டிவிட்டுப் போய்விடுவான்.

இப்படியே ஒரு வருஷம் ஆயிற்று.

மூர்த்தியின் நடத்தையில் அவ்வப்போது சில மாறுதல்கள் தெரிய ஆரம்பித்தன. அடிக்கடி பம்பாய்க் கும், கல்கத்தாவுக்கும் அவன் பணம் அனுப்பி வருவது ராதாவுக்குத் தெரிந்தது. அங்கே உறவினர் யாருமே இல்லையே, இவர் யாருக்குப் பணம் அனுப்புகிறார்?" என்று யோசித் துப் பார்த்தாள் அவள் . மூாத்தி குளிப் பதற்குப் போயிருந்தபோது அவன் சொக்காய் ஜே.பியில் இருந்த சில முக்கியமான காகிதங்களை எடுத்துப் பார்த் தாள். நாலைந்து மணியார்டர் ரசீதுகள் இருந்தன . பம்பாய்க்கு இரண்டும் கல்கத்தாவுக்கு மூன்றும் அனுப் பப்பட்டிருந்தன. பம்பாயிலிருந்து வந்த ரசீதுகளில் தமயந்தி என்றும் ரோகிணி என்றும் கையெழுத் துக்கள் காணப்பட்டன. கல்கத்தாவில் ஒரு புடவைக் கடையின் பெயர் மற்றொரு ரசீதில் காணப்பட்டது. இன்னொன்றில் நகைக் கடையின் பெயர்.

ராதா பிரமை பிடித்தவள் போல் நின்றாள். தன் லுடைய படிப்பு, அழகு. சாதுர்யம் யாவும் ஒரு சூதாடி யிடம் பணயம் வைக்கப்பட்டது போல இருந்தது. வெளி யூர்களிலும் இவருக்குப் பெண்களிடம் சிநேகமா?

ராதா தன்னைச் சுதாரித்துக்கொண்டாள். அவசரப் பட்டு வெளியே சொன்னால் விஷயம் ஆபாசமாகிவிடும். அவர் போக்கில் விட்டுத் திருப்ப வேண்டும் என்று தீர் மானித்தாள்.

அன்று இரவு மூர்த்தி வீடு திரும்பும் போது மணி பதினொன்றுக்கு மேல் ஆகிவிட்டது. சுவாமிநாதன் 'உன் புருஷனை இன்னும் காணவில்லையே? எங்கே போயிருக்கிறான்?' என்று ராதாவை விசாரித்தார்