பக்கம்:முத்துச் சிப்பி.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 9

பதினைந்து நிமிஷங்களில் காப்பி போட்டு எடுத்துக் கொண்டு அவள் வெளியே வந்தாள். படுக்கை அரு கில் குனிந்து கணவனைப் பார்த்தாள். அவனுடைய நெற்றி யில் முத்து முத்தாக வியர்வை அரும்பியிருந்தது. கண்கள் லேசாகத் திறந்திருந்தன. அருகில் கிடந்த துண்டினால் அவன் நெற்றியை லேசாகத் துடைத்து விட்டு, 'என்ன. காபி கொண்டு வந்திருக்கிறேன், சாப்பிடுகிறீர்களா!' என்று கேட்டாள் பவானி.

அவன் பதில் பேசவில்லை. மெதுவாக அவன் நெற்றி யில் கை வைத்துப் பார்த்தாள் பவானி. அப்பொழுதும் அவன் அசையவில்லை. மிகவும் நிதானமாக அவன் .ாளங் கையைத் தொட்டுப் பார்த்தாள். சில் லென்று இருந்த அந்தக் கரம் அவளை நடுக்கத்துடன் பின் வாங்கச் செய்தது. அவள் பிடியினின்று துவண்டு அது படுக்கையில் விழுவதற்கும், அவள் சற்றும் எதிர்பாராத விதமாக டாக்டர் உள்ளே நுழைவதற்கும் சரியாக இருந்தது.

எப்படி இருக்கிறார்?' என்று கேட்டுக் கொண்டே அவர் அருகில் சென்று அவன் கையை எடுத்தவுடன் வேதனையால் அவர் நெற்றியைச் சுருகிக்க்கொண்டார். டாக்டர் அவர்?...' என்று பவானி திணறிக் கேட் பதற்கு முன்பு அவ்வளவுதான் அம்மா, நீ கொடுத்து வைத்தது. கடவுளின் கருணை உன் விஷயத்தில் வற்றிவிட்டது' என்று கூறினார்.

4. அண்ணனும் தங்கையும்

அதன் பிறகு கல்யாணமும் பார்வதியும் அவளுக்கு எவ்வளவோ உதவி செய்தார்கள். ஊரிலிருந்து பவானி யின் தமையனும், அவன் மனைவியும் வந்தார்கள். அருகில் இருந்து எல்லாக் கிரியைகளையும் செய்து முடித் தார்கள். பவானியின் கணவன் இறந்து பதினைந்து தினங் கள் வரையில் யாருமே எதுவுமே பேசவில்லை. ஒரு வழி