பக்கம்:முத்துச் சிப்பி.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

என்று கூறியதில் ஆனந்தம் ஏற்பட்டது. பெயரும் புகழும் பெற்றுள்ள அவர் ஒரு குணவான். நல்ல வருமான மும், இஷ்டப்படி வாழ சுதந்திரமும் இருக்கும் போதும் டாக்டர் பூரீதரன் கட்டுப்பாடுடனே வாழ்ந்து வந்தார். எந்தப் பெண்ணையும் தாயாகவும் சகோதரியாகவும் காணும் பக்குவமான மன நிலை அவருக்கு ஏற்பட்டிருந் தது. அப்படிப்பட்டவரின் வாயால் பாலுவைப் புத்தி சாலி என்று அழைப்பது ஒர் ஆசி மாதிரி இருந்தது அவளுக்கு.

கூடத்தில் மாட்டியிருந்த கடிகாரம் டிக் டிக்’ என்று சப்தித்துக் கொண்டிருந்தது. பவானி கையில் இருந்த புத்தகத்தைப் புரட்டிக் கொண்டே இருந்தாள்.

' என்ன படித்துக் கொண்டிருந்தீர்கள்? * காரைக்கால் அம்மையாரின் சரிதம். பக்தியால் பரமனுடன் பேசி மாங்கனி பெற்றவளின் மனசைப் பற்றி, பண்பைப் பற்றி வியந்து கொண்டே இருந்தேன். எனக்கு இந்தப் பையன் இராமல் இருந்தால் நான் எங்காவது புண் ணியஸ்தலங்களுக்குப் போயிருப்பேன்...

அவளுடைய நீல நிற விழிகள் ஹாலில் இருந்த புத்தர் சிலை மீது பதிந்து இருந்தன.

அம்மா பவானி!' என்று அழைத்தார் டாக்டர்

பூரீதரன் .

உங்களுடைய உயர்ந்த நோக்கங்களும் உன்னத லட்சியங்களும் போற்றப்பட வேண்டியவையே. இருந்தா அலும், ஆண்டவனிடம் காரைக்கால் அம்மையாரைப் போல் பக்தி செலுத்தி அதற்கேற்ற முறையில் வாழ்க்கை முறையை வகுத்துக் கொள்வது இந்தக் காலத்தில் GupL+ u 1fi gʻi - ஒர் இளம் பெண் - அழகானவள்-துணையற்ற வள்-ஒவ்வொரு ஊராகச் சென்று கொண்டிருந்தால் ஆபத்துக்கள் வருவது நிச்சயம். "துணையில்லாதவள்’