பக்கம்:முத்துச் சிப்பி.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 I 5

என்னும் போதே சமூகம் அவளைச் சாதார ண மா கப் பார்ப்பதில்லை. அனுதாபத்துடன் பார்க்கிறது. சுயநலத் துடன் பார்க்கிறது என்று கூடச் சொல்லலாம். ஆண்டவனிடம் செலுத்தும் பக்திக்குச் சமமாக ஒன்று இருக்கிறது. நம்மால் முடிந்தவரை பிறருக்கு உதவிகள் புரிவது. பிறர் இன்னல்களை நம்முடையதாகப் பாவித் து அவர்களுக்குச் சேவை புரிவது. இதிலே மனசுக்கு மகத்தான ஆறுதல் கிடைக்கும். அதற்கு உதாரணமாக நான் இருக்கிறேன். மனைவியை இழந்து பதினைந்து வருஷங்கள் ஆயின. இருந்தும் எனக்கு மன சிலே ஆறுதல் இருக்கிறது. வாழ்க்கையில் இன்பம் இருக்கிறது. காரணம் பிறருக்குச் சேவை செய்வத என் வாழ்க்கை யின் லட்சியமாக இருப்பதால் தான்... .

பவானி பணிவுடன் எழுந்து நின்றாள். டாக்டர்! அன்றொரு நான் என்னிடம் ஏதோ பேச ஆசைப் படுவதாகக் கூறினtர்கள்...'

' அதைத் தான் கேட்க வந்தேன் அம்மா. நாகராஜ னிடமே இதைப் பற்றிக் கேட்க இருந்தேன். அவர் ஊரிலேயே இருப்பதில்லை. ராதாவின் கல்யாணத் தன்று அவரைப் பார்த்தேன். மறுபடி பார்க்க முடியவில்லை. சுமதிக்கு ஜூரம் வந்தபோது நீங்கள் நர் லாகப் பணி புரிந்தது என் மனத்தை விட்டு நீங்கவில்லை. தமையன் குழந்தையைக் காப்பாற்றி விட்டீர்கள். ஆனால் இம் மாதிரியான சேவையைப்பெற எத்தனையோ குழந்தை கள், பெரியவர்கள். தாய்மார்கள் காத்துக் கொண்டிருக் கிறார்கள். நீங்கள் ஏன் நர்ஸ் தொழிலுக்குப் படிக்கக் கூடாது?’ ’

பூரீதரன் தாம் சொல்ல வந்ததைச் சொல்லி விட்டார்

பவானி கொஞ்ச நேரம் மெளனத்தில் ஆழ்ந்திருந்தாள்.

தமையனின் குலவிளக்கு அணையாமல் இருக்க வேண்டும் என்று அன்று நினைத்தாள் அவள். அம்மாதிரி