பக்கம்:முத்துச் சிப்பி.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 I 6

எத்தனை குலவிளக்குகள், தாய்மார்கள், குடும்பத் தலைவர்கள் ஆஸ்பத்திரிகளில் வியாதியுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள்? ஒவ்வொருவரும் உயிர் வாழ வேண்டும் என்ற ஆசையிலே நம்பிக்கை வைத்திருக்கிறார் கள். அவர்களுக்குச் சேவை செய்வது எவ்வளவு மகத்தானது என்று சிந்தித்துப் பார்த்தாள் பவானி.

டாக்டர் ! அண்ணாவிடம் கேட்டுச் சொல் கிறேன். அதற்கும் நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாள் அவள் .

டாக்டர் பூரீதரன் காரில் வீட்டுக்குத் திரும்பும் போது மன நிறைவுடன் திரும்பினார். பவானியைப்பற்றி ஒர் உயர்ந்த எண்ணம் அவர் மனத்தில் ஏற்பட்டது.

22. ஆண்டவனின் குரல்

- டாக்டர் பூரீதரனின் யோசனையைப் பவானி தன் தமையனிடத்திலும் மன்னியிடத்திலும் தெரிவித்தாள். தனக்கும் அதில் ஆவல் இருப்பதாகச் சொன்னாள். இந்த விஷயத்தைப் பற்றி விசாரிக்க நாகராஜன் பூரீதரனின் வீட்டுக்குச் சென்றான்.

I

அவளுடைய பணம் ஐந்தாயிரம் என்னிடம் இருந்தது. அது இப்பொழுது பத்தாயிரமாக வளர்ந் திருக்கிறது. அதில் கிடைக்கும் வட்டியைக் கூட நான் அவளுக்காகச் செலவழிப்பதில்லை. எல்லாச் செலவு களையும் நானே பார்த்துக் கொள்கிறேன். பாலுவின் படிப்பின் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். அவன் வேலைக் குப் போய்த் தான் ஆகவேண்டும் என்ப இல்லை. எவ்வளவோ வசதிகளுடன் சந்தோஷமாக இருக்கலாம்' என்றான் நாகராஜன் .