பக்கம்:முத்துச் சிப்பி.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 7

தமையனுடன் பவானியும் சென்றிருந்தாள்.

  • - এ ঠেটা দুস্তক T ! உன் னுடன் இருப்பதில் எனக்கு எந்த விதமான குறையும் இல்லை. மற்றப் பெண்களுக்கு

குடும்பம் குழந்தைகள் என்றெல்லாம் கடமைகள் இன் பங்கள் இருக்கின்றன . என்னுடைய மனசிலே

சூன்யம் நிறைந்து போகாமல் இருக்கவே இப்படி என் பொழுதைக் கழிக்க விரும்புகிறேன் அண்ணா என்றாள் பவானி.

நாகராஜன் எந்த விஷயத்தையுமே ஆழ்ந்து நோக்கு பவன் அல்ல. ஆகவே தங்கையின் அபிப்பிராயத்தை ஆமோதித்தான்.

அடுத்த சில நாட்களில் பவானி நர் ஸ்கள் கல்லூரியில் சேர்ந்தாள். முதல் நாள் அவள் கல்லூரியிலிருந்து திரும்பியதும் சுமதி. அத்தையின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் என்னென்ன புத்தகங்கள் படிக்கிறாள், நோட்டுப் புத்தகங்கள் எத்தனை வாங்கி இருக்கிறாள் என்று அறியும் ஆவலுடன் கூடத்தில் உட்கார்ந்து இருந்தாள் அந்தப் பெண்.

அவள் எதிர்பார்த்தபடி பவானி ஒரு சுமைப் புஸ்தகங்களைத் துாக்கிக்கொண்டு வரவில்லை. . அத்தை பெரிய வகுப்பிலே படித்தால் புத்தகச் சுமை குறைந்து போகுமா?’ என்று விசாரித்தாள்.

ஏனம்மா அப்படி கேட்கிறாய்? தினம் இரண்டு மூன்று புத்தகங்கள் கொண்டுபோனால் போதும். அவசிய மானவற்றை நோட்டுப் புத்தகம் ஒன்றில் குறித்துக் கொண்டு வருவேன்' என்றாள் பவானி சிரித்துக்

கொண் டு .

'எனக்கு இருக்கும் புத்தகங்களைச் சுமந்துகொண்டு

போயே என் முதுகு வளைந்து விட்டது. அத்தை என்று