பக்கம்:முத்துச் சிப்பி.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: ; 8

கூறி முதுகை வளைத்து அவள் எதிரில் நடந்து காண்பித் தாள் சுமதி.

கூடத்தில் இருந்தவர்கள் எல்லோரும் சிரித்தார்கள் . கோமதி உள்ளேயிருந்து பவானிக்குச் சிற்றுண்டியும் காப் பியும் கொண்டு வந்து கொடுத்தாள். பவானி அந்த வீட் டுக்கு வந்த பிறகு கோமதியின் குணத்தில் பல மாறுதல் கள் ஏற்பட்டு விட்டன. படிப்படியாக அவளிடமிருந்த சோம்பல் நீங்கிவிட்டது. தான் ஒரு நோயாளி என்று சதா டாக்டரைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தவள் , இப் போது தெம்புடன் இருந்தாள். வீட்டில் ஒடி ஆடி வேலைகளை செய்வதால் உடலுக்குத் தெம்பும் உள்ளத் துக்கு மகிழ்ச்சியும் ஏற்படுவதை உணர்ந்தாள். பவா னிக்கு மன் னியின் திறமையைப் பார்க்கும்போது சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருந்தது.

சிற்றுண்டி சாப்பிட்டு முடித்த பிறகு உடை மாற்றிக் கொண்டு கொல்லையில் மலர்ந்திருந்த மலர்களை மாலை யாகத் தொடுத்து படங்களுக்குப் போட்டாள் பவானி. அவள் உள்ளத்திலே உ வகையும், களிப்பும் நிரம்பி இருந் த ை.

கண்ணை மூடிக்கொண்டு தன் இஷட தெய்வமா கிய நடராஜப் பெரு மானின் படத்தின் முன்பு கரங்கு வித்து நின்றிருந்தாள் பவானி. அமைதி நிலவும் அப்பெரு மானின் முகத்தில் இருக்கும் புன்னகையைக் கவனித்தாள் ஒரு விநாடி. கண்களைத் திறந்து, டாக்டர் பூரீதரனுக்கு அந்த அமைதியும், கருணையும் இருப்பதாக அவள் மனத் துக் குத் தோன்றியது.

'அம்மா பவானி 1 என்று அவர் அழைத்த குரலில் ஆண்டவனின் குரலும் கேட்டது அன்று தான் நம்பி இருக்கும் நடராஜன்தான் தன்னை இந்தத் தொழில் செய்யும் படிப் பணித்திருக்கிறான் என்று பவானிக் குத் தோன்றியது.