பக்கம்:முத்துச் சிப்பி.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 I 9

டாக்டர் பூரீதரனைப்பற்றி அவள் மனத்திலே ஒர் உயர்தரமான எண்ணம் எழுந்தது. அவ்வெண்ணம் தன்னை ஈன்ற அன்னையிட த்திலும் தந்தையிடத்திலும் காட்ட வேண்டிய பக்தியை விட ஒரு படி உயர்வாகத் தோற்றமளித்தது. அந்தப் புனிதமான எண்ணம் எழுப்பும் இன் பத்தில் லயித்திருந் தாள் பவானி.

23. பெண்மையின் பலஹlனம்

யூரீதரனின் மன சில் கெட்டவை நிற்பதில்லை. நல்லவைகள் நிலைத்து நின்று, உருவாகிப் பயன் பெற்று நிலவும். மூர்த்தியைப்பற்றி அவர் மனசிலே ஒன்றுமே இல்லை. தங்கையின் கணவன் நல்லவனா அல்லது கெட் டவனா என்பது ஒன்றும் அவருக்கு விளங்கவில்லை. அதைப்பற்றி அவர் அக்கறை காட்டும்படி சாதாவும் நடந்து கொள்ளவில்லை. கணவனும் மனைவியும் ஒற் றுமையாக இருக்கிறார்கள். அவ்வளவுதான் நமக்கு வேண்டியது என்று இருந்துவிட்டார். மூர்த்திக்கு என்ன சம்பளம் வருகிறது? அதை அவன் எப்படி செலவழிக் கிறான்? என்றெல்லாம் அவர் ஏன் ஆராயட் போகிறார்? தங்கைக்கு வேண்டிய புடவைகள், இதர சாமான்களை ஜெயது'க்கு வாங்கும்போது வாங்கித் தந்து விடுவார். சில சமயங்களில் அவர்களே வாங்கி வந்து பில் லை மட்டும் அவர் மேஜைக்கு அனுப்பி விடுவதும் உண்டு.

டாக்டர் காமாட்சியிட மும் அவர் இதைப்பற்றிப் பெருமையாகச் சொல்லிக் கொண்டார். என் எதிரில் ராதா அவள் கணவனுடன் பேசியே பார்த்ததில்லை. இருவரும் வெட்கப்பட்டுக் கொண்டு என் னைக்கண்டதும் விலகிப் போய் விடுகிறார்கள் என்றார்.