பக்கம்:முத்துச் சிப்பி.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

"அப்படியா? கல்யாணத்துக்கு முன்பு ரொம்பவும் நெருங்கிப் பழகியவர்கள் ஆயிற்றே! இப்படி இருப்பது அதிசயம் தான்' ' என்றாள் காமாட்சி.

இந்த விஷயத்தை அவள் தன் தகப்பனாரிடம் கூறிய போது அவர் ஆச்சரியம் அடையவில்லை. 'என்னவோ, அந்தப் பிள்ளையிடம் எனக்கு நம்பிக்கை இல்லை' என்று அசுவாரசியமாகப் பதிலளித்தார்.

சுவாமிநாதனுக்கு மட்டும் மனசிலே ஏதோ ஒரு சந்தேகம் சூழ்ந்து கொண்டிருந்தது. பல இரவுகள் மாடியில் ராதா மெதுவாக விசும்பும் குரலை அவர் கேட் டிருக்கிறார். அவளுடைய கண்கள் சிவந்து முகம் வீங்கி இருந்ததையும் அவர் பார்த்தார்.

'ஏனம்மா! உடம்பு சரியில்லையா?' என்று கூட விசாரித்தார்,

"ஆமாம். நேற்றிலிருந்து ஜலதோஷம் என்றாள் ராதா.

  • ஏதாவது மருந்து சாப்பிடேன்!

சாப்பிட்டேன். அண்ணாவின் அலமாரியைத் திறந்து எடுத்துக் காலையிலேயே சாப்பிட்டேனே.

அவள் எதுவும் சாப்பிடவில்லை என்பதும் அவருக்குத் தெரியும். தினம் மூன்று வேளைகள் தலைவாரிப் பின்னிக் கொள் கிறவள் சேர்ந்தாற் போல் இரண்டு நாட்கள் தலைவாரிக் கொள்ளவே இல்லை.

r

'இ று வெள்ளிக்கிழமை, தலையைப் பின்னி பூ வைததுக் கொள் அம்மா' என்று சுவாமிநாதன் புஷ்பச் சரத்தை எடுத்து வந்து அவளிடம் கொடுத்தார். அதை மேஜை மீது வைத்து விட்டுக் கவனியாதவள் போல்

இருந்தாள் ராதா.