பக்கம்:முத்துச் சிப்பி.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 I

தன்னை அலங்கரித்துக் கொள்வதிலும், விதம் வித மாக உடுத்துவதிலும் விருப்பமுடைய ராதா, இப்படி

எதிலும் பற்றில்லாமல் இருப்பது வேதனையாக இருந்தது.

குறுகிய காலத்தில் ராதாவின் போக்கில் பெருத்த மாறுதல் ஏற்பட்டிருந்தது. வெளியில் எதையும் சொல் லாமல் உள்ளுக்குள்ளேயே கு ைமந்து கொண்டிருந்தாள் அவள். ஒரு தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மூர்த்தியிடம் அவள், நீங்கள் இப்படியே இருந்தால் எப்படி?’ என்று கேட்டேவிட்டாள்.

'நான் எப்படி இருக்கிறேன்?' ' என்று அலட்சிய மாகக் கேட்டான் மூர்த்தி.

'நமக்குக் கல்யாணம் ஆகி இரண்டு வருவுங்கள் ஆகின்றன. ஒரு நாளாவது உங்கள் சம்பாத்தியத்தி லிருந்து எனக்கு ஒரு புடவை வாங்கித் தந்திருக்கிறீர் , J, grr Ir P * *

பூ ! இதற்கென்ன பி ர ம | த ம் 1 வாங்கினால் போச்சு ! நீ என் னைக் கேட்கவில்லை, நானும் வாங்கித் தரவில்லை.

" அப்படியானால், எங்கெங்கோ இருப்பவர்களுக் கெல்லாம் பனம் அனுப்புகிறாரே, அவர்கள் கேட்டு வாங்கிக் கொள்வார்கள் போல் இருக்கிறது’ என்று

ராதா நினைத்துக் கொண்டாள். பேசாமல் நிற்கும் மனைவியைப் பார்த்தான் மூர்த்தி. பரிவோடு அவள் அருகில் வந்து நின்று, ராதா ! எனக்கு ஆபீசில் ஒரு தொல்லை ஏற்பட்டிருக்கிறது. வெளியூர் போய் வரும் போது ஆபீஸ் கணக்கு களில் பிசகு நேர்ந்து விட்டது. அதைச் சரிக்கட்டுவதற்குப் பணம் வேண்டும்...' என்று கேட்டான் .