பக்கம்:முத்துச் சிப்பி.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22,

போனான் மூர்த்தி பண்டிகை பருவங்களில் எங்கே போனாலும் அவள் முன்பே அதிகமாக நகை போட்டுக் கொள்ள மாட்டாள். ஆகவே அதைப் பற்றி யாருமே கவனிக்கவில்லை. கணவனுடைய நடத்தை தெரிந்த பிறகு, அந்த உள் ளத்தில் அபரிமிதமான கசப்பு அவ ளிடத்தில் வளர்ந்து வந்தது. இருவரும் பேசுவதுகூட

நின்று போயிற்று.

ஒரு தினம் ராதா வெளியில் செல்லுவதற்காக ஆடை அணிகள் அணிந்து கொள்ளத் தன் பீரோவைத் திறந்தாள். நகைப் பெட்டியைத் தி ந்ைதபோது அதனுள் ளிருந்த ஒரு ஜோடி வைர வளையல்களைக் காண வில்லை. அந்த வளையல்கள் அவளுடையவை அல்ல. கல்யாணத்தன்று ரீதரன் அவளுக்குக் கொடுத்தார் . ' "ராதா ! இவை நம் தாயினுடையவை. அவள் முகம் உனக்குத் தெரியாது. ஆகவே அவள் ஞாபகமாக வைத்துக் கொள்' ' என்றார், முகூர்த்தத்தன்று மாலை அவள் "ரிஸ்ப்ஷ னு 'க்குக் கிளம்பும்போது, அவள் கையில் வளையல் பெட்டியைக் கொடுத்துக் கொண்டே.

அந்தப் புராதன சொத்துதான் இப்போது மாயமாக மறைந்து விட்டது.

ராதாவின் உடல் வியர்த்தது. பரபரக்க பீரோ பூராவும் தேடினாள். அங்கிருந்த மேஜை பூராவும் குடைந்தாள். கணவனின் நிஜார் பைகளில் பார்த்தாள். அவனுடைய கோட்டுப் பைகளில் தேடினாள். ஆனால் அவள் தேடிய வஸ்து அகப்படாமல் வேறொரு வஸ்து அகப்பட்டது. அது ஒரு கடிதம்

ஆங்கிலத்தில் முத்து முத்தான கையெழுத்துக்களில் ஒரு பெண் மூர்த் திக்குக் கடிதம் எழுதியிருந்தாள். அதில் மூர்த்தி நான்கைந்து மாதங்களுக்கு முன்பு வந்து போனவன் அவளை வந்து மணப்பதாகக் கூறிச் சென்ற