பக்கம்:முத்துச் சிப்பி.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

ஒய்வு கொடுக்க வேண்டும் என்றும் அபிப்பிராயப் பட்டார்.

அன்று தான் ராதாவுக்குக் குடும்பம் என்றால் என்ன என்பது புரிந்தது. அடுப்பங்கரையில் பாதிச் சமையல் அப்படியே கிடந்தது. உள்ளே சென்ற ராதா பிரமித்து நின்றாள். ஒருவழியாகச் சமையலை முடித்துப் பாலைக் காய்ச்சி வைப்பதற்குள் அவளுக்குத் திணறி விட்டது.

குடான பாலை டம்ளரில் எடுத்து வந்து சுவாமி நாதன் அருகில் வந்தாள். அவர் அப்போதுதான் கண் விழித்திருந்தார். அருகில் வந்து நிற்கும் ராதாவைப் பார்த்தார் அவர் .

"'என்னம்மா இது? என்று கேட்டுக் கொண்டே மெள்ள எழுந்தார். Гт 35 Гт வர் கில் உட்கார் i

(Լէ lb : o لائی| - தாள்.

'ஒன்றுமில்லை. இந்தப் பாலைச் சாப்பிடுங்கள். நீங்கள் எழுந்திருந்து ஒன்றும் செய்ய வேண்டாம்."

'நீயாகவே எல்லா வேலைகளையும் செய்தாயா? உனக்கு வழக்கமில்லையே அம்மா...'

'வழக்கப்படுத்திக் கொண்டால் வருகிறது...'

"ராதாவா இப்படிப் பேசுகிறாள்!" என்று வியந்தார் அவர் .

--

f

இதற்குள் டாக்டர் பூரீதரன் அங்கு வந்தார். அடுத்த நாளிலிருந்து வேறு ஒருவர் வீட்டுக்கு வருவதாக வும், எல்லா வேலைகளையும் அவரே செய்து விடுவார் என்றும், சுவாமி நாதன் மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தால் போதும் என்றும் தெரிவித்தார்.

சுவாமிநாதன் அந்தக் குடும்பத்தினரின் அன்பைக் கண்டு வியந்தார். தம்மிடம் அவர்கள் கொண்டிருந்த