பக்கம்:முத்துச் சிப்பி.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 2 F

அன் பின் ஆழத்தைப் பற்றி நினைத்துக் கொண்டே மெய்ம்மறந்திருந்தார் அவர் .

அன்றிரவு எட்டு மணிக்கு மூர்த்தி காரியாலயத்தி லிருந்து வீடு திரும்பினான். மாடிக் குச் சென்று அவசர மாகத் தன் பெட்டியில் துணிகளை எடுத்து வைத்துக் கொண் டான். முகம் கழுவி, தலையை வாரி, மறுபடியும் உடுத்திக் கொண்டிருக்கு ம போது ராதா மாடிக்கு வந்தாள் . கணவன் எங்கோ போவதற்குத் தயார் செய்து கொண்டிருப்பதைப் பார்த்ததும், ' எங்கே புறப்படு கிறீர்கள்? என்று கேட்டாள்.

'கல்கத்தாவுக்குப் போகிறேன் என்றான் மூர்த்தி.

' என்ன விஷயம்? காலையில் என் னிடம் சொல்லவே இல்லையே...

'உன்னிடம் சொல்லி விட்டுத்தான் நான் எதையும் செய்யவேண்டு மா ?

  • அப்படிச் சொல்லவில்லையே. எனக்குத் தெரிந்தும் சில காரியங்களை நீங்கள் செய்யலாமே... .

அப்படி உனக்குத் தெரியாமல் என்ன செய்து . ட்டேனா ம்...?

ராதாவுக்கு ஆத்திரம் பொங்கிக் கொண்டு வந்தது. நீங்கள்...... ' என்று தடு மாறினாள் சிறிது நேரம்.

சொல்லேன். நீ படித்தவள் ! என் தயவு உனக் கெதற்கு ...? உன்னை வைத்துக் காப்பாற்ற நிறையச் சம்பாதிக்கும் தமையன் இருக்கிறார். உன்னிடம் அன்பு செலுத்த அந்தச் சுவாமிநாதன் வேறு இருக்கிறார்.

யார் இருந்தால் என க்கு என்ன பிரயோசனம்? ஒழுங்காக இருக்க வேண்டியவர் சரியாக இருப்பது தான்

F. H.

எனக்கு முக்கியம்... ..