பக்கம்:முத்துச் சிப்பி.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 I

பச வேண்டியவன். அப்படி ஏசாமல் 'இனி மேல் என்ன பண்ணப்போகிறாய்" என்று நாசூ க்காகக் கேட்கிறான்.

குழந்தைக்குச் சாதம் ஊட்டி முடிந்தவுடன் கையை அலம்பிக் கொண்டு பவானி உள்ளே சென்றாள். பீரோ வைத் திறந்து அவளுக்காக அவள் கணவன் வைத்து விட்டுப் போன ஆதாரத்தை எடுத்து வந்து அவன் கையில் கொடுத்தாள்.

அது ஒர் "இன்ஷ அரன்ஸ் பாலிஸி". மூவாயிரம் ருபாய்களுக்கு 'இன ஷூர்' செய்யப்பட்டிருந்தது. வேறே எந்தவிதமான ஆதாரத்தையும் நம்பி அவள் இருக்க முடியாது. இருபத்தைந்து வயது நிரம்பிய பவானியின் வாழ்க்கைக்கு அந்த மூவாயிரம் ரூபாய் ஒரு ஆதரவா என்ன ? அவளும் அவள் குழந்தையும் அதை வைத்துக் கொண்டு சாப்பிட்டாக வேண்டும். பாலு பெரியவனாகி விட்டால் அந்த மூவாயிரம் ரூபாயிலிருந்து அவனைப் படிக்க வைத்தாக வேண்டும்.

வாழ்க்கையில் அன்றாடத் தேவைகளே அநேகம். ஒரு மாசத்தில் மூவாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறவர்களும் உண்டு. அதை ஒரு வருஷத்தில் சம்பாதிக்கிறவர்களும் உண்டு . ஏதோ ஒரு சமயம் என்றால் இருக்கட்டும் என்று எண்ணியே பவானியின் கணவன் மூவாயிரம் ரூபாய்க்குப் பாலிஸி எடுத்துக்கொண்டான். மனைவிக் கும் குழந்தைக்கும் அதுதான் ஆதாரமாக அமையப் போகிறது என்று அவன் கனவிலும் நினைத்தவன் அல்ல. கணவன் மூவாயிரம் சேமித்து வைத்திருப்பதே பவானிக் குத் தெரியாது. மாதச் சம்பளம் நூற்றிருபது ரூபாய் வந்தது. அதில் நூறு ரூபாய் குடும்பச் செலவுக்குக் கணவன் அவளிடம் கொடுத்து விடுவான். மீதி இருபது ருபாயை அவன் என்ன செய்கிறான் என்பதை அவளும் கேட்கவில்லை. அவனும் சொல்லவில்லை.

மு . சி-2