பக்கம்:முத்துச் சிப்பி.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

'சுற்றி வளைத் துப் பேசுகிறாய் ராதா? சொல்வ வந்ததைச் சொல்லி விடு...' என்று சொல்வியவாறு மூர்த்தி அங்கிருந்த சோ பாவில் உட்கார்ந்தான் .

ராதாவுக்கு துணிச்சல் ஏற்பட்டது.

' என்னுடைய வைர வளையல்களைக் காணோம்! மத்தியானம் பூராவும் தேடினேன்! அந்த நகை குடும்பச் சொத்து. அண்ணா அதை எனக்குக் கொடுக்க இஷட மில்லை யென்றால் ஜெயபூரீக்கு கொடுத்திருக்கலாம். அவர் அப்படிச் செய்யாமல், எனக்குக் கொடுத்தார். அதை இழக்க நான் சம்மதப்பட வில்லை.

மூர்த்தி திகைத்து நின்றான். சட்டென்று தன் பெட்டியைத் திறந்து கத்தை கத்தையாகக் கட்டி வைக்கப்பட்டிருந்த ரூ. டாய் நோட்டு களை எடுத்து

வெளியே எறிந்தான்.

'உன் வைர வளையல்களை விற்ற பணம்தான் இது. இந்தா ! இதை எடுத்துப் போய் மறுபடியும் நீ வைர வளையல் வாங்கிக் கொள்ளலாம்' ' என்று கூறியவாறு கையில் ஒரு சிறு பெட்டியுடன் வீட்டை விட்டுப் புறப் பட்டான் மூர்த்தி. மாடியின் பின் புறமாக இறங்கி அவன் வேகமாகச் சென்று மற்றொரு கேட் வழியாக வெளி யில் செல்வதைக் கவனித்தாள் ராதா. கீழே கிடந்த ரூபாய் நோட்டுக்களை எடுத்து அவசரமாக எண்ணிப் பார்த்தாள் அவள். மூவாயிரத்து ஐந் நூறு ரூபாய்கள் இருந்தன; அந்த நகை குறைந்தது ஐயாயிரம் பெறுமே.

புதிதாக வாங்கப் போனால் மேலேயே ஆகலாம். மூர்த்தி தன் கைச் செலவுக்குச் சில நூறுகளை வைத்துக் கொண்டுதான் பாக்கியை வீசி எறிந்து விட்டுப் போயிருக்க வேண்டும் என்று ஊகித்தாள் அவள். மிச்சப் பனமாவது மிகுந்ததே என்றுதான் அவள் நினைத்தாள். எந்தத் தமயந்தியோ, ரோகிணியோ அடைந்துவிட்டுப்