பக்கம்:முத்துச் சிப்பி.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

229

போகட்டும்’ என்று தியாகம் புரிய அவள் சித்தமாக இல்லை. தோட்டுக்களை எடுத்து, பீரோவில் வைத்துப் பூட்டினாள். சுவாமிநாதன் எப்படி இருக்கிறார் என்று பார்த்து வர அவள் கீழே வந்தபோது அவர் நிம்மதியாக அயர்ந்து துரங்கிக் கொண்டிருந்தார்.

ஜெயபூரீக்கும் பூரீதரனுக்கும் உணவு பரிமாறி விட்டு ராதா தான் சாப்பிடாமலேயே மாடிக்குச் சென்றாள். மாடி வராந்தாவில் ரீதரன் அவளைப் பார்த்து "ராதா! உன் புருஷன் இன்னும் வீட்டுக்கு வர வில்லையா? சற்று முன் உன் அறையில் பேச்சுக் குரல் கேட்டதே. வந்து விட்டான் என்றல்லவா நினைத் தேன்?" என்று கேட்டார்.

'வந்திருந்தார் அண்ணா, அவசர பாக வெளி யூருக்குப் போக வேண்டும் என்று சொல்லிக் கொண்டு உடனே புறப்பட்டுப் போய்விட்டார்... .

  • சாப்பிட்டானா?

இல்லை, பசிக்கவில்லை என்று சொன்னார். ராதா வெகு சாம்ர்த்தியமாக நடந்தவற்றை

மறைத்துக் கூறினாள். அதற்கு மேல் பூரீதரன் பேச்சை

வளர்த்தவில்லை.

தின் அறைக்குள் சென்ற ராதா சிறிது நேரம் மேஜை அருகில் உட்கார்ந்து ஏதோ புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்தாள். அவளுக்கு எதுவுமே செய்யத் தோன்றவில்லை. கணவன் வெளியே கோபமாகச் சென்ற போது அவள் அதைப் பொருட் படுத்தவில்லை. அவன் சென்ற பிறகுதான் , தான் செய்த தவறை உணர்ந்தான். கோபத்தினால் அவன் ஏதாவது இசைகேடாக நடந்து கொண்டானானால் என்ன பண்ணுவது என்று பயந்தாள் ராதா, அங்கிருந்து எழுந்து சென்று பீரோவைத் திறந்து

மு. சி-15