பக்கம்:முத்துச் சிப்பி.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.3 I

டாக்டர் காமாட்சி உற்சாகமாகத் தான் இருந்தா ள். தொழில் முறையில் அவள் பெயர் மிகவும் பிரபலமாக இருந்தது. ஏற்கெனவே தகப்பனாரின் சொத்து ஏகப் பட்டது இருந்தது. அத் துடன் அவளுக்கே வருமானம் அதிகமாக வர ஆரம்பித்தது. ஏழைகளுக்கு இலவசமாக வைத்தியம் செய்தாள்.

•-9ዛ க் தச் சேவையிலேயே அவள் மனம் இன்பத்தையும். அமைதியையும் அடைந்திருந்தது. ஆனால் ஒன்றே ஒன்று அவள் மனத்தை வருத்திக் கொண்டிருந் தது. தள்ளாத முெவரான தன் தகப்பனார் இப்படி ஒண்டிக் கட்டை யாக அவ்வளவு பெரிய வீட்டில் உட்கார்ந்து பொழுதைக் கமிக்கும் படி ஆகிவிட்டதே என்கிற வகத்தம் அவளுக் கு ஏற்பட்டது. அந்த வயசிலே பேரன் களும், பேத்திகளும் அந் த வீட்டில் விளையாடி, அவர் களுடன் இன்பமாகப் பொழுகைக் கழிக்க வேண்டியவர். இப்படி நடமாடும் பொம்மையாக அவர் வாழ்க்கை அமைந்து விட்டதே என்று அவள் வருந்து வாள். தனக்கு ஒழிவு ஏற்படும் போதெல்லாம் தகப்பனாரின் அருகிலேயே இருந்து வேடிக்கையாகப் பேசி அவருக்கு ஆனந்த மூட்டு வாள்.

ஒரு தினம் காமாட்சி வெளியிலிருந்து வரும்போது ஒரு குதிரைப் பொம்மையை வாங்கி வந்தாள். காரை விட்டு மகள் இறங்குவதை வேதாத் ம் தாழ்வாரத்தில் நின்று கவனித்தார். ஒரு கையில் குதிரைப் பொம் ையை எடுத்து வந்து கூடத்தில் வைத்து, அைப்பா ! இங்கே பாருங்கள்? இது எப்படியெல்லாம் ஆடுகிறது? என்று அவரை அழைத்துக் காண்பித்தாள்.

வேதாந்தம் அவளை யும் குதிரைை யயும் மாறி மாறிப் பார்த்தார். அவர் மனத்தை வேதனை பிழிந் தெடுத்தது. "இப்படியெல்லாம் நாலு குழந் தைகளைப் பெற்றெடுத்து விளையாட்டுச் சாமான்கள் வாங்கிக் கொடுத்து மகிழ வேண்டி ய பெண் அல்லவா இவள்?