பக்கம்:முத்துச் சிப்பி.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23.2

பாவி! அவள் வாழ்க்கையை நான் எப்படிப் பாழாக்கி விட்டேன்! என்று இடிந்து போய் கூடத்தில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டார் அவர்.

ஏனப்பா பேச மாட்டேன் என் கிறீர்கள்?' என்று ஒரு குழந்தையைப் போலக் கேட்டாள் காமாட்சி குதிரையை இப்படியும் அப்படியும் ஆட்டிக்கொண்டே .

யாருக்காக அம்பா இதை வாங்கி இருக்கிறாய்?' '

நமக்குத் தான் இருக்கட்டுமே! நாலு நாளைக்கு வைத்துக்கொண்டிருப்பது. அப்புறம் எங்கள் ஆஸ்பத்திரி யில் குழந்தைகள் விடுதி” க்குக் .ெ க ா டு த் து விடுகிறேன்...' "

தகப்பனாரை இப்படி யெல்லாம் மகிழ் விக்க வேண்டும் என்று மகள் ஆசைப்பட்டாள். பெண்ணின் மன சிலே இப்படியெல்லாம் ஆசைகள் எழுகின்றனவே அந்த ஆசைகளை அவள் எப்படி நிறைவேற்றிக்கொள்ள முடியும்?' என்று தகப்பனார் மனத்துக்குள் கு மைந்தார். அந்தக் குதிரை கூடத்திலேயே ஐந்தாறு நாள் கிடந்தது. ஒரு தினம் காமாட்சி அதை எடுத்துத் தன் கார் டிரைவரின் குழந்தையிடம் கொடுத்து விட்டாள்.

என்னம்மா இது? பொம்மையை வாங்கி வந்தாய்? ஏன் திரும்பக் கொடுத்து விட்டாய்' என்று கேட்டார் வேதாந்தம்.

எந்தெந்தப் பொருள் எங்கே இருக்க வேண்டுமோ அங்கே இருந்தால்தான் அதன் தரம் உயரும் அப்பா. நான் என்ன விளையாட்டுக் குழந்தையா? .

எனக்கென்ன குழந்தைகள் இருந்து பாழாய்ப் போகிறது!’ என் கிற வருத்தம் அவள் குரலில் தொனித்த மாதிரி இருந்தது அவருக்கு .

  • * LD 35 fr பாவி நான் 1’ ’ என்று தமக்குள்ளேயே மறு கினார் அந்தக் கிழவர்.