பக்கம்:முத்துச் சிப்பி.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 3


தகப்பனாரின் மனத்தில் தன்னைப் பற்றி ஏதோ போராட்டம் நடக்கிறது என்பதைக் காமாட்சி அறியவே இல்லை. எப்பொழுதும் போலவே அவள் தன் அலுவல் களில் ஈடுபட்டிருந்தாள்.


ஒரு தினம் பிற்பகல் சுமார் மூன்று மணிக்கு மேல் டாக்டர் பூரீதரன் அவர்கள் வீட்டுக்கு வந்தார். அவருடன் ஜெயபூனயும் வந் திருந்தாள். கூடத்தில் உட்கார்ந் திருந்த வேதாந்தம் சிறிது நேரம் ஜெயபுரீயை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.


உங்கள் பெண்ணா? என்று கேட்டார் அவர் டாக்டரைப் பார்த்து.


"ஆமாம். ஜெயபூரீதான். உங்களுக்கு அடையாளம் தெரியவில்லையா! நன்றாக வளர்ந்திருக்கிறாள்' என்று சொல்லிக் கொண்டே, ஏனம்மா ! இந்தத் தாத்தாவை உனக்கு தெரியுமா!' என்று கேட்டார்.


_தெரியாமல் என்ன அப்பா? வக்கீல் தாத்தா தானே? நாலைந்து வருவுத் துக்கு முன்னே எனக்கு இவர் "லேடி பொம்மை வாங்கித்தரவில்லையா? அதை இன்ன மும் வைத் திருக்கிறேனே ! . என்றாள் .ெ ஜ ய ரீ. காமாட்சி இவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந் தவள் எழு திருந்து உள்ளே போனாள். அழகிய குழந்தைப் பொம்மை ஒன்றை எடுத்து வந்தாள்.


    • இந் தா அம்மா! இதையும் வைத்துக்கொள்' ' என்று கூறி ஜெயபூரீயிடம் கொடுத்தாள் அதை.


ஜெயபுரீக்குத் தயக்கமாக இருந்த து. பொம்மை வைத்துக்கொண்டு விளையாடும் வயசெல்லாம் தாண்டி விட்டதே இது நமக்கெதற் கு’ என்று அவள் யோசித்துக் கொண்டு சற்றுத் தயக்கத்துடன் கையை நீட்டினாள் பொம்மையை வாங்க.