பக்கம்:முத்துச் சிப்பி.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 3

கிறு கிறுப்பும் அவருக்கு ஏற்பட்டது. வீட்டில் சமையலைக் கவனித்துக் கொள்ள வேறொருவர் வந்திருந்தார்.

மனைவியிடம் கோபித்துக் கொண்டு போன மூர்த்தி

யிடமிருந் , மூன்று நான்கு மாதங்கள் வரை யில் தகவலே * - " " ---- - o .ליה -

தெரியாமல் இருந்தது. முதலில் சில நாட்கள் வரையில் ராதா அதிகம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. "அவர் தான் முதலில் கடிதம் எழுதட்டுமே. தவறு அவர் பேரில்தானே இருக்கிறது?’ என்று வீராப்புடன் மெளனம் சாதித்து வந்தாள். பால்யத்திலிருந்து கூடப் பிறந்த த ைமயனிடம் கூட மனம் விட்டுப் .ழகாமல் போகவே தன் மன சில் இருக்கும் குறைகளை யாரிடம் வெளி யிடுவது என்பது புரியாமல் அவள் திகைத்து, தன் துயரத்தைத் தானே விழுங்கிக் கொள்ள நேர்ந்தது.

அவள் வேளா வேளை க்குச் சாப்பிடாமல் எதிலும் பற் பில்லாமல் இருப்பதை சுவாமிநாதன்தான் கவனித் தார். வாழைக் குருத்துப் போல் மழமழ வென்று வாளிப் பாக வளர்ந்திருந்த அந்தப் பெண் நிறம் மாறி இளைத் துப் போய் இருப்டா து அவர் மனத்தைப் பிழிந் தெடுத்தது. ராதா குழந்தையாக வளர்ந்து பெரியவள் ஆனது. வீட்டில் சர்வ சுதந்திரத்துடன் அவள் இருந்தது பூரீதரன் தன் சகோதரியிடம் வைத்திருக்கும் அலாதி அன்பு, இவை யாவும் அவர் சிந்தனையைத் துண்டி விட்டன.

கூடத்தில் ஒரு பெஞ்சியில் படுத்துக்கொண்டே சுவாமி நாதன் சிந்தனை யில் மூழ்கி இருந்தார். மாடியில் ராதாவும் யோசனையில் மூழ்கி, தன்னைச் சுற்றி நடப்பவை எல்லாவற்றையுமே மறந்திருந்தாள்.

கல்யானம் ஆவதற்கு முன்பு அந்த வீட்டில்

அவளுக்கு இருந்த சு. த ந் தி ர ம், உரிமை யாவும் இப்பொழுது பறிபோய் விட்ட மாதிரி ஒருவித உணர்ச்சி