பக்கம்:முத்துச் சிப்பி.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 7

என்னம்மா! எங்கே கிளம்புகிறாய். பெட்டி எல்லாம் எடுத்துத் தயாராக வைத்திருக்கிறாயே? உன் புருஷனிட மிருந்து ஏதாவது கடிதம் வந்ததா?' என்று விசாரித் தார்.

ராதா சிறிது நேரம் சிலை மாதிரி நின்றாள். கண்களில் கண்ணிர் தேங்கி நின்றது. நெஞ்சிலே துயரச் சுமை பாரமாக அழுத்தியது. விவரிக்க முடியாத ஒரு கலக்கம் அவள் உள்ளத்தைச் சூழ்ந்து கொண்டிருந்தது.

சுவாமிநாதன் தள்ளாடிக் கொண்டே உள்ளே வந்தார்.

ராதா! உன்னைப் பார்த்தால் என் வயிற்றைச் சங்கடம் செய்கிறது. எவ்வளவோ விஷயங்களை நீ என் னிடமிருந்து மறைத்து வைத்திருக்கிறாய். துயரங்களை மன சில் வைத்துப் பூட்டி வைத்தால் மட்டும் அவை வெளியே தெரியாமல் போய் விடுமா? உன் மனம் துயரத் தில் ஆழ்ந் திருக்கிறது என்பதை உன் முகமே காட்டி விடுகிறதே! வயசிலும் அனுபவத்திலும் பெரியவனாகிய என்னை நீ ஏமாற்றிக் கொண்டே இருக்கிறாய்...'

மேல் மூச்சு வாங்க சுவாமிநாதன் பேசி முடிப்பதற் குள் ராதா தேம்பித் தேம்பி அழுதாள். பிறகு ஒருவாறு சமாளித்துக் கொண்டு, அவரிடமிருந்து கடிதமே வர வில்லை . அவர் எங்கே இருக்கிறார் என்பதும் தெரிய வில்லை என்றாள்.

கணவனின் நன்மையில் அவன் செய்யும் ஒவ்வொரு தொழிலிலும் காண்பிக்க வேண்டிய அக்கறையில் ராதா தவறி விட்டாள் என்பது சுவாமிநாதனுக்கு விளங்கியது. "இந்தப் பெண் எதற்காக அவசரப்பட்டு விவாகம் செய்து கொண்டாள்? . என்னும் அளவுக்கு அவர் மனம் வருந்தியது. தன் துயரை எல்லாம் அவள் கண்ணிராக

வடிக்கும் வரையில் சுவாமிநாதன் ஒன்றும் பேசவில்லை.