பக்கம்:முத்துச் சிப்பி.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 ()

கிடந்தன . சற்றுத் தள்ளி ஒரு பெரிய வேப்ப மரம் குளிர்ந்த காற்றை வீசிக் கொண்டு நின்றது . தோட்டக் கார ராமையா, மண் வெட்டியால் பாத்திகள் வெட்டும் ஒசை மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.

மாடியில் ராதா தன் அறைக்குள் அரைத் துாக்கத் தில் ஆழ்ந்திருந்தாள். அவள் மனத்து ள் பிரு மாண்ட மான கல்கத்தா நகரம் தோன்றியது . அதன் தெருக் களில் மூர்த்தி அலைவது தெரிந்தது. அவன் பக்கத்தில் ஒரு வங்காளிப் பெண் விசுக் விசுக் கென்று நடை போட்டுக் கொண்டு வந்தாள். மூக்கும் விழியுமாக கொடியைப் போலத் து வண்டு அவள் நடந்து வருவது தனி அழகாக இருந்தது . ராதாவின் உள்ளும் புறமும் அனலாகத் தகித்தது. மறுபடியும் ஒரு காட்சி! கல்கத்தாவின் இரவு விடுதி” களில் மூர்த்தி மயங்கிக் கிடக்கும் காட்சி அது. ராதா தனக்குள் பேசிக் கொண்டான். பஞ்சமா பாதகங்களில் இரண்டைத் தன் கணவன் செய்து விட்டதாக அவள் மனம் புலம்ப ஆரம் பிக்கிறது. எப்படியும் அவனைக் கண்டு பிடித்து நல்வழிப் படுத்த வேண்டும் என்று மனம் துடிக்கிறது. அதற்கு வேண்டிய ஆற்றலும், துணிவும் தன்னிடம் இருக்கின்ற னவா என்று ராதா யோசிக்கிறாள். துாக்கத்தில் கூட ராதாவின் கண் இமை ஒரங்களிலிருந்து கண்ணிர் கசி கிறது.

பூரீதரன், கையிலிருந்த புஸ்தகத்தை மார்பின் மீது வைத்துக் கொண்டு அப்படியே அரைத் துாக்கத்தில் ஆழ்ந்து கிடந்தார். வேதாந்தம், காரை விட்டு இறங்கி உள்ளே சென்று டாக்டரின் எதிரில் கிடந்த நாற்காலியில் அமர்ந்தார். சட்டென்று விழித்துக் கொண்ட ரீதரன். வேதாந்தத்தை வரவேற்று விட்டு, ' என்ன ஸ்ார் ! இப்படி நடு மத்தியான வேளையில் வந்திருக்கிறீர்கள்? வெயில் நேரத்தில் நீங்கள் வீட்டை விட்டு வெளியே வர மாட்டீர்களே? என்று கேட்டார்.