பக்கம்:முத்துச் சிப்பி.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. I

வேதாந்தம் அசட்டுச் சிரிப்பு சிரித்தார். அவர் ஒன்றும் கூறாமல் இருக்கவே மறுபடியும் புனிதரன் ' என்ன லார் ! பேச மாட்டேன் என்கிறீர்கள்? வந்த விஷயம் என்ன? சொல்லுங்கள் என்று வற்புறுத் தினார்.

வேதாந்தம் தம் வழு க் கைத் தலையைத் தட விக் கொண்டார் . * ஒன்று மில்லை டாக்டர்.. மிகவும் முக்கியமான விஷயமாக உங்களைப் பார்த்துப் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டு வந்தேன்... . என்று இழுத்தார். பூரீதரன் தம் இருக்கையில் எழுந்து உட் கார்ந்தார். சரி. சொல்லுங்கள், இங்கே என்னை யும். உங்களை யும் தவிர வேறு யாரும் இல்லை என்று கூறினார். வேதாந்தம் வீட்டை விட்டுக் கிளம்பும்போது ஏதோ ஒர் அசட்டுத் தைரியத்துடன் கிளம்பினார். தனக்குப் பிறகு காமாட்சியின் தனி வாழ்க்கை. எப்படி யெல்லாமோ வாழ வேண்டிய பெண் மனமிழந்து தனி மரமா நிற்கும் அவலக்கோலம் யாவும் அவர் மனத்தை நெகிழச் செய்து அவரை ஒர் அவசர முடிவுக்கு அழைத்துச் சென்றது. ரீதரனின் வீட்டினுள் நுழைந்த வ டன் அவருக்குத் தாம் தீர்மானித்துக் கொண்டு வந்த விஷயத்திலேயே சந்தேகம் ஏற்பட்டது. “காமாட்சிக்குக் கிட்டத்தட்ட முப்பது வயது ஆகிறதே அவள் என்ன சின்னக் குழந்தையா, அவளைக் கேட்காமல் நாம் எந்த விஷயத்திலும் இறங்க முடியுமா?’ என்கிற சந்தேகம் தான் அது.

"பூரீதரன் மட்டும் என்ன ? வயசில் சிறியவரா? ந ற்பது வயசுக்கு மேல், அதுவும் மனைவி இறந்து பல வருவுங்கள் கழித்து அவருக்கு மறுமணத்தில் ஆவல் ஏற்படப் போகிறதா? அந்த ஆவல் பால்யத்திலேயேஎழுந் திருக்க வேண்டியதல்லவா?"

  • சரி. வந்தது வந்தா கி விட்டது. ஏத வது பொய்யைச் சொல்லி விட்டு ப் போய் விடுவோம் .