பக்கம்:முத்துச் சிப்பி.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 of 2

இதற்குத் தான் அதிகமாக வயசானவர்களை பாவம் ! வயசாகி விட்டது. இனிமேல் அவர் சற்று முன்னே பின்னே தான் இருப்பார் என்று சொல்கிறார்கள் போல் இருக்கிறது என்று பலவாறு எண்ண மிட்டுக் கொண்டே வேதாந்தம் உட்கார்ந்திருந்தார். ஆனால், பூரீதரன் விழித்துக்கொண்டு, ' என்ன ! எங்கே வந்தீர்கள்? என் றெல்லாம் கேட்க ஆரம்பித்தவுடன் வேதாந்தம் தாம் சொல்ல வந்ததை மறைக்க முடியாமல் சிறிது நேரம் திண் டா டிப் போனார்.

எடுத்ததற்கெல்லாம் பொய் சொல்லிப் பழக்க மடை யாதவர்கள் யாவருக்குமே இந்தத் திண் டாட் டம் ஏற்படுவதுண்டு. விஷயத்தை மறைக்கப் போய் எக்கச் சக்கமாக அகப்பட்டுக் கொள்வார்கள். வேதாந்தத்துக் கு. பொய் சொல்லிப் பழக்கமே இல்லை. கட்சிக்காரர்களுக் காக நீதி ஸ்தலத்தில் வாதாடும்போதுகூட கூடுமான வரை யில் நியாயத்தை 11 ம் உண்மையையும் பின் பற்றியே சென்றவர். அப்படிப்பட்டவர் அற்ப சொற்பத்துக்காக எதற்குப் பொய் சொல்லப் போகிறார்? அவர் மனசிலே ஒர் எண்ணம் எழுந்து விட்டது. அது சரியா தவறா என் றெல்லாம் அவர் சிந்தித்துப் பார்க்கவில்லை. இப் பொழுது அதை மறைத் துப் பேசுவானேன் என்ற தீர்மா னத்துடன் வேதாந்தம் தம் அச்சங்களை உதறிவிட்டு விஷயத்தைக் கூறினார் பூரீதரனிடம் .

எல்லாவற்றிற்கும் மேலாகக் குழந்தையி ன் அபிப் பிராயமும், உங்கள் அபிப்பிராயமும் எப்படி இருக் இறதோ? காமாட்சி என் மகள்தான் இருந்தாலும் ஒரு பெண்ணின் மனத்தை அறிவது மிகவும் கஷ்டமான விஷயம். தகப்பனாக இருந்தாலும், உடன் பிறப்பாக இருந்தாலும் ஒரு பெண்ணின் மனசை லேசில் புரிந்து கொள்ள முடிவதில்லை. ஒரு வேளை அவள் தாய்: